கசாப்பு கடையில் தனது முறை வர காத்திருக்கும் வெள்ளை ஆடுதான் நான். இந்நிலையில் நான் எதை புரிந்துக் கொள்ள போகிறேன்.கோழிக்குஞ்சு ஒன்றினை அதனது தாய் கேட்டதாம் நீ என்னவாகப் போகிறாய் என்று.அப்போது அது கூறியதாம் ,சிக்கன் 65 ஆகவோ அல்லது பிரியாணியாகவோ ஆகப் போகிறேன் என்றுப் பெருமையுடன் கூறியதாம்.!என்னை யாரும் கேட்கவில்லை.கேட்டிருந்தால் குழப்பம் அடைந்த்ருப்பேன்.என்னவாகப் போகிறேன் என்பது ஒரு புதிராகத்தானே இருந்தது.!
ஆமாம்!மனிதன் கடவுளுக்கு பயந்தவனா?புனித யாத்திரை,விரதம்,மலைக்குச் செல்லுதல் மூலமாக புனிதம் அடைந்து விடுகிறானா?அப்படியென்றால் அனைவரையும் பிடித்துக் கொண்டுப் போய் புனிதம் அடையச் செய்யலாமே!
கடவுளை ஏமாற்றிய கதை ஒன்று தெரியுமா!
இனிய கடல் பயணம்.சொகுசுக் கப்பலில் ஆடல்,பாடல்,ஆட்டம்,பாட்டம்தான்.!
திடீரென பலத்த காற்று,பேய் மழை கப்பலே ஆட்டம் கண்டது.என்ன செய்தாலும் கப்ப்லை காப்பற்ற
முடியுமா என்பதே சந்தேகம் ஆயிற்று!எல்லோரும் கதற உயிர்த் தப்பிக்குமா என்பதுக் கேள்விக் குறி ஆயிற்று!
அப்போது ஒரு இறை நம்பிக்கையுடையவர் கூருகிறார்."நாம் பிரார்த்தனை மூலமாகத்தான் தப்பிக்க இயலும்.இறைவனை நம்புவது ஒன்றே வழி.தப்பித்துப் பிழைத்தோமனால் இக்கப்பலை இறைவனுக்கு காணிக்கை
ஆக்குவோம்!"உயிர் பயத்தில் ஏகமனதாக அணைவரும் ஒத்துக்கொள்கின்றனர்.என்ன ஆச்சரியம்!மழை,காற்று எல்லாம் மாயமாக மறைந்து விட்டதே!பத்திரமாக கரை திரும்பியாகிவிட்டது..கரை திரும்பியவர்களுக்கோ மனம் மாறிவிட்டது.கப்பலைக் காணிக்கையாகக் கொடுப்பதாகப் பிரார்த்தனை செய்தவரைத் திட்டித் தீர்த்தனர்.அப்போது ஒரு நயவஞ்சகன் கூறுகிறான்.இப்பிரச்னையை தானேத் தீர்ப்பதாக!
பின்விளம்பரம் ஒன்று!" அனைத்து வசதிகளுடன் கப்பல் ஒன்று விற்பனைக்கு!பூனையுடன்!!கண்டிப்பாக
இரண்டையும் சேர்த்துத்தான் விற்கப்படும்" என்று.விந்தையிலும் விந்தை!பூனைக்கும் கப்பலுக்கும் என்ன சம்பந்தம் இருக்கமுடியும் என்று மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.இருப்பினும் சிலர் கப்பலை வாங்க வந்தனர்.உள்ளே நுழையும் போதே பூனையையும் சேர்த்துதான் வாங்கவேண்டுமென்று கட்டளையிடப்பட்டனர்.மர்மம் என்னவென்று புரிகிறதா?
விலை பேசும் படலம் தொடங்குகிறது.
இதோ இந்த சொகுசானக் கப்ப்லை ஒரு அருமையான பூனையுடன் விற்கின்றோம்.கப்பலின் விலைப்
வெறும் இருபதே ரூபாய்தான் ,பூனையின் விலை இரண்டு கோடி ரூபாய்.வாங்குபவர்களுக்கோ குழப்பமோ குழ்ப்பம் ஏதாகிலும் கப்பலின் விலை இரண்டு கோடிக்கு மேல் தாண்டும்.பூனையைக் கொடுத்தால் என்ன,யானையைக் கொடுத்தால் என்ன!என்று இரண்டு கோடி இருபது ரூபாய்க்கு கப்பலையும்,பூனையையும் சேர்த்து வாங்கிச் சென்றனர்.!
இதோ பிரார்த்தனை நேரம்.காணிக்கைச் செலுத்தும் நேரம்.கப்பல் விற்ற பணம் இருபது ரூபாயை பயபக்தியுடன்
உண்டியலில் செலுத்துகின்றனர்.பூனை விற்ற பணத்தை நேர்மையாகப் பங்கிட்டுகொள்கின்றனர்.என்ன நேர்மை பாருங்கள்!
கடவுளையே ஏமாற்ற நினைக்கும் மனிதன் மனிதனை ஏமாற்றுவது என்ன கஷ்டமான செயலா!ஜாதியையும் ,ஏழ்மையையும்,சுனாமியையும் வைத்து இங்கு சம்பாதிப்பர்கள் எத்தனை பேர்
விரதமிருந்து கோவில் சென்று திரும்பியவர்கள் எப்படியிருக்கவேண்டும்?ஒரு முறை சென்று வந்தாலே தங்கள்
தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும்.ஆனால் விரதம் முடிந்த உடனேயேதான் எல்லாவற்றையும் ஆரம்பித்து விடுகிறார்களே.
வாழ்க்கை எப்போது அர்த்தமுள்ளதாக ஆகிறது?அணைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும்போது!அன்பு
என்றால்?தனக்காக மட்டும் வாழாமல் பிறருக்காகவும் சிறிது வாழ முயற்சிப்பவரே அன்பானவர
பிறருக்காகவும் வழ்வதுதான் அன்பு என்றாள்,பிறருக்காக சாவதும் அன்புதானா?இல்லை,பிறருக்காக சாக
நேர்ந்தால் அது சாவல்ல!நீடித்த வாழ்வே!தர்மம் அவர்களை சாகவிடாது!மரணத்தை நிறுத்திவிடும்.?
எத்தனையோ பேர் இறந்திருக்கிறார்களே அதெல்லாம் சாவில்லையா?உயிர் பிரிதல் வேறு!சாவு வேறு!பிறருக்காக சாக நேர்ந்தால் உயிர் பிரியலாம்!அது சாவல்ல!தியாகம்.ஏசுவின்,காந்திஜியின்
உயிர் பிரிந்தது, அது சாவல்ல!என்றும் அழியாத ஜீவிதம்!அழிவற்ற அமரத்தன்மை!்.ஒரு புறம் இயற்கையின் சீற்றம்,மறுபுறம் மனிதனின் கோரத்தாண்டவம்!விடிவுதான் எப்போது?
ஏதோ சோகக்கதையைச் சொல்லி உங்களின் அணுதாபத்தை பெற நான் விரும்பவில்லை.வாழ்வில் வாழ்வதின்
அர்த்தம் ஒன்று வேண்டும்.?
கசாப்பு கடையில் இன்று வியாபாரம் இல்லை.எனது முறையும் வரவில்லை.அது வரை தொடரும்!