Monday, June 19, 2006

அன்னையின் கருத்துக்கள்

அன்னையின் கருத்துக்கள்
நோய் வருவது இயற்கை!!அதை எப்படி எதிர்கொண்டு குணமாகலாம் என்பதைக் குறித்த அன்னையின் கருத்தைத் தெரிந்துக் கொள்வோமா!!
நோயை வெல்ல வேண்டும் என்ற மன வைராக்கியத்தை நமக்குள்ளே வளர்த்துக் கொள்ளவேண்டும்! மனதளவில் மட்டுமில்லாமல் உடல் செல்கள் ஒவ்வொன்றிற்கும் அவ்வெண்ணம் வரவேண்டும்!!நூற்றுக் கணக்கான மருந்துகளை நாம் எடுத்துக்கொள்ளலாம்!!ஆனால் உடல் சம்பந்தப் பட்ட நோயை வெல்லும் மனத் திட்பம் நமக்கு இல்லை எனில் அம்மருந்துகளால் நம்மை குணப்படுத்த இயலாது!!!

நம்மைப் பிடித்திருக்கும் தீயசக்தியை நாம் அழித்துவிடலாம்!!!எத்தனை ஆயிரம் முறைகள் வேண்டுமானாலும் திரும்பச் திரும்பச் செய்யலாம்!!
நாம் தீயசக்தியை அழிக்கும் ஒவ்வொரு முறையும் ஏற்படும் வெற்றிடத்தில் வெளியில் இருந்து வேறு தீயசக்திகள் உள்ளே புகுந்து விடும்!!

நோயை வெல்வதற்குறிய தீர்மானமான மன உறுதியை நம்முள் வளர்த்துக் கொண்டே இருக்கவேண்டும்!!

இறுதியாக ,
நம் உடல் நலக்குறைவை நேசிக்காமல் இருந்தோமானால் நம் உடல் நலக் குறைவு தானே நம்மை விட்டு விலகி விடும்!!!
ஸ்ரீ அன்னை

15 comments:

Anonymous said...

என்னுடைய முதல் மறு மொழி உங்கள் பதிவிற்கு. என்னுடைய முதல் வருகையும் கூட.

அழகாக கூறியிருக்கிறீர்கள். எளிய நடை, அனைவரும் புரிந்துக் கொள்ளக் கூடிய சரளமான தமிழிலும் பிரமாதம்.

இதை முதலிலேயே சொல்லி இருக்க வேண்டும். ஆனால் நான் உங்கள் வலைபதிவை கவனிக்கவில்லை. அதற்காக மன்னியுங்கள் ஐய்யா....

Anonymous said...

sooo nice,, good keep it up
i want more information about mother(mira)

rnatesan said...

வணக்கம்!!வருக!!வருக!!தங்கள் வருகையினால் நான் பெருமை அடைகின்றேன்!!
நீங்களும் ஒரு வலைப் பதிவை தொடங்கலாமே!!

சிவமுருகன் said...

மனதால் முடியாதது ஒன்றுமில்லை.
என்ற என்குருநாதார் ஸ்ரீ சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் மொழி இங்கே வேறு வார்த்தைகளில் கண்டேன்.

rnatesan said...

நன்றி சிவமுருகன்,
நம் பெரியோர்கள்,ஞானியர் எத்தனையோ நல்லதை நமக்கு சொல்லிச்சென்றுள்ளனர்!!
நாம்தான் அதைக் கடைப்பிடிப்பதில்லை!!

ஸ்ரீ said...

இனிமையையும்,நலத்தையும் அருளும் அன்னையின் கருத்துக்களை அளித்தமைக்கு நன்றி.

Unknown said...

நடேசன் ஐயா
மிகவும் நல்ல கருத்துக்கள் கொண்ட பதிவு.நன்றி ஐயா

Dr.Srishiv said...

அருமை அண்ணா
அன்னையின் அருளுரைகளை அற்புதமாக அள்ளி வழங்கி இருக்கின்றீர்கள், நன்றி அண்ணா...:)
ஸ்ரீஷிவ்..

குமரன் (Kumaran) said...

நடேசன் ஐயா. ஆங்கிலத்தில் அன்னையின் அருள்மொழிகளையும் அரவிந்தரின் அருள்மொழிகளையும் படித்திருக்கிறேன். அவற்றைத் தமிழிலே தருகிறீர்கள். மிக்க நன்றி. இந்தப் பதிவில் சொல்லப் பட்டுள்ள 'மனதளவில் மட்டுமில்லாமல் உடல் செல்கள் ஒவ்வொன்றிற்கும் அவ்வெண்ணம் வரவேண்டும்' என்ற கருத்தும் தீயசக்திகள் (Hostile Forces) என்ற கருத்தும் அரவிந்தர், அன்னை இவர்களால் மிக நன்றாக விளக்கப்பட்டுள்ளது. அவற்றையும் தமிழில் நீங்கள் விளக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அப்படிச் செய்தால் இன்னும் நன்றாக அன்னை சொல்வதைப் புரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன். Will be able to understand within the context.

rnatesan said...

நன்றி!!நன்றி!!
புவனா,சிவா,கோபி மற்றும் குமரன் அவர்களுக்கு!!
இன்னும் நிறைய எழுதும் ஆவலத் தூண்டுகிறது உங்கள் பின்னூட்டம்!

Anonymous said...

என்ன நண்பா.. இன்ன்னும் ஒன்னும் புதுசா கண்ணுக்கு தெரியல....?;)

Anonymous said...

ஒன்றும் காணவில்லை........

rnatesan said...

நன்றி பரமேஸ்வரி,
"இரூக்குமிடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார்
ஞானத் தங்கமே"'
என்றப் பாடல் தெரியுமா?

ENNAR said...

நல்கருத்தை நவின்ற நண்பருக்கு நன்றி

Anonymous said...

Thanks for writing about the Mother. Your effort is appreciatable.

The principles of the Mother are written in TAMIL in many books. The site
http://www.mambalammeditationcenter2.com/DetailsofbooksinTamil.htm provides more information. To get the books(English and Tamil) in US , please mail to sen_vani3@yahoo.co.in.

Thanks,
Vani Senthil.