Sunday, July 02, 2006

ஒரு இலங்கை அகதி நம்பிக்கையுடன் ஜெயித்தது.

ஒரு இலங்கை அகதி நம்பிக்கையுடன் ஜெயித்தது.
ரெஜினால்ட் பாண்டிச்சேரியுலுள்ள பிம்ஸ் மருத்தவ மனையில் ஒரு டாக்டராக வலம் வருகிறார்.நுனி நாக்கு ஆங்கிலத்தில் அனைவருடனும் அன்புடன் உரையாடும் அவர் காதில் கேட்பதோ தையல் மெஷின் ஓசைதான்.
இதில் என்ன விசேடம் என நீங்கள் கேட்பது காதில் விழுகிறது.
தமிழகத்தில் இலங்கை அகதிகள் முகாமில் இருந்து உருவான முதல் டாக்டர் ஆவார்.
இலங்கை மன்னார் மாவட்டம் ,நானாட்டான் பகுதி ,யேசுராஜ் விவசாயம் செய்து வந்தவர்.2 மகன் ஒரு மகள் என்று அமைதியும்,மகிழ்ச்சியுமாய் வாழ்ந்த்க் குடும்பம்.பிரச்னை இனப் பிரச்னையுருவில் வந்தது.அகதியாக தமிழகத்தை நோக்கி வந்தது அக்குடும்பம்.இங்கு வந்ததுமே புரிந்தும் கொண்டார்கள்.அரசாங்கம் தரும் சலுகையினால் வயிற்றைக் கழுவமுடியுமேத் தவிர வேறு ஒன்றும் செய்ய இயலாது என்று!
அப்போதுதான் தாய் செபஸ்தியம்மா முடிவெடுத்தார் எப்படியாவது குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்று.
ஆனால் வருமானத்திற்கு என்ன செய்வது.ஆஹா அவர் சிறிய வயதில் கற்றுக் கொண்ட தையல் வேலை கை கொடுத்தது.ஆரம்பத்தில் யாருமே அவரிடம் துணி கொடுக்கவில்லை.பிறகு கடுமையாக போராடி அனைவரது நம்பிக்கையையும் பெற்று வாழ்வில் முதல் டாக்டரை அகதிகள் முகாமில் இருந்து உருவாக்கினார்.
எல்லாவற்றையும் விட கடலூரில்தான் தன் பள்ளிப் படிப்பை முடித்தார்!

இப்போது ரெஜினால்ட் சொல்வதைக் கேட்போமா?

‘’அம்ம மட்டும் எங்களைப் பிடிவாதமாய் படிக்கவைக்கலைன்னா நாங்களும் சும்மா சாப்பிட்டு முகாமில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்திருப்போம்.எங்களை கொஞ்சம் கூட கவலையோ வேதனையோ பட விட மாட்டங்க!அந்த அம்மவின் அக்கரைதான் எங்களை உயர்த்தியது! ‘’
இதை கடந்த இரண்டு நாட்களாக தொலைகாட்சியில் பார்த்திருப்பீர்கள்!இருப்பினும் நமது வாழ்த்துக்களை தாய் செபஸ்தியம்மாவிற்கும்,ரெஜினால்டுக்கும் தெரிவிப்போம்!!
வாழ்த்துக்கள்!! செபஸ்தியம்மா!!
வாழ்த்துக்கள் !!ரெஜினால்ட்.!!
இந்தப் பதிவை என் நண்பர் மூலமாக ரெஜினால்டுக்கு அனுப்பப் போகிறேன்!!

10 comments:

Anonymous said...

நல்லதொரு பதிவு நண்பரே.... படிக்கும் அனைவருக்கும் உற்சாகத்தை அளிக்கும் பதிவும் கூட... மிக்க நன்றி...தொடரட்டும் உங்கள் பதிவுகள்:)

rnatesan said...

மிக்க நன்றி,
இதில் நான் பெருமைப் பட ஒன்றுமில்லை.செபஸ்தியம்மாதான் பெருமைப் படவேண்டும்.

சயந்தன் said...

கொஞ்சம் வசதியும் வாய்ப்பும் இருந்து உயிர் பிழைக்கவும் பொருளீட்டவும் அகதிகளாக மேற்கு நாடுகளுக்கு சென்றவர்கள் இன்று நல்ல பொருளாதார வாழ்க்கைத் தரத்தை அடைந்து விட , உயிர் மட்டும் பிழைத்தால் போதுமென இந்தியா நோக்கி சென்ற அந்த மக்களின் நிலை பரிதாபகரமானது தான். ஆனாலும் இந்திய அரசாங்கங்கள் மற்றும் அமைப்புக்கள் உதவிக் கரம் நீட்டினால் அவர்களுக்குள்ளும் மிகச்சிறந்த கல்வியாளர்கள் பெருகுவார்கள். தம்மை அரவணைத்த நாட்டிற்காய் முழுமையாய் தம்மை அர்ப்பணித்து சேவை செய்வார்கள்.

thamillvaanan said...

சந்தோசமான தகவல். தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.

அன்புடன்
தமிழ்வாணன்

ரவி said...

வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்..

மலைநாடான் said...

நல்ல தகவலும், நம்பிக்கை வாசகமும். நன்றி நண்பரே.

சிவமுருகன் said...

என் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்..

rnatesan said...

நன்றி,
பரமேஸ்வரி,சயந்தன்,தமிழ்வாணன்,புவனா,செந்தழல் ரவி,மலைநாடன் மற்றும் சிவமுருகன்.
பெருமை அனைத்தும் செபஸ்தியம்மா மற்றும் ரெஜினால்டுக்கே!!

Anonymous said...

நடேசன் ஐயா!
செய்திக்கு நன்றி! இச்செய்தி இன்னும் இலங்கைப் பத்திரிகையில் வெளிவந்ததாகத் தெரியவில்லை.படித்துத் தலை நிமிரவேண்டுமெனும் அவாவுள்ள அனைவர் உள்ளார்கள்! உதவிகள் சரியாகக் கிடைத்தால் இன்னும் பலரை இனம் காணலாம். மிகுந்த பாராட்டுக்குடியவர் அத் தாயார். அவர் " மகன் சான்றோன் எனக் கேட்டு,பெரிதுவந்திருப்பார் ஈன்ற பொழுதிலும்".
யோகன் பாரிஸ்

rnatesan said...

ஜோஹன்,
மிக்க நன்றி.அந்த செபஸ்தியம்மாவின் போராட்டத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது!