Monday, February 12, 2007

திருமண ஊர்வலத்தின் முடிவில் சவ ஊர்வலம்!

கடலூரில் கடந்த வியாழனன்று ஒரு சோக நிகழ்ச்சி நடந்தது.பொறியியல் கல்லூரியில் கடைசி வருடம் படிக்கும் மாணவன் ஒருவன் ஷேர் ஆட்டோ மோதி சம்பவ இடத்திலேயே மூளை நசுங்கி இறந்தான்.

இதில் என்ன முக்கியத்துவம்!

இருக்கிறது!

விடிந்தால் திருமணம்!

மாணவன் தன் மாமாவின் திருமண விழா ஏற்பாடுகளை செய்ய வெளியில் வந்தபோது இத்துயர சம்பவம் நடந்தது!
ஷேர் ஆட்டோ ஒட்டுனர் காலையிலுருந்து போட்டி போட்டுக் கொண்டு மது அருந்திக் கொண்டு இருந்தாராம்!போதையில் என்ன செய்கிறோம் என்றுத் தெரியாமலேயே பலரைக் காயமுற செய்து ஒருக் குடும்பத்தின் ழுந்தையே
அழித்துவிட்டான்!

இரவில் 8 மணி அளவில் கேள்வியுற்ற மண்மகன் குடும்பத்தினர் தங்கள் துயரத்தை வெளிகாட்டிகொள்ளாமல் திருமணத்தைத் தொடர்ந்தனர்.(:
இதற்கும் காரணம் இருக்கிறது.மணமகள் வீட்டு ஏழ்மை நிலையை கருதியும்,அவரின் வாழ்வு பாதிக்கப்படும் என்றுக் கருதியும் இம்முடிவு எடுக்கப்பட்டது.

விடியலில் திருமணம் முடிந்தது! துக்கத்தைக் கட்டுப் படுத்த இயலாமல் அனைவரும் கதற வந்த அனைவரும் சவ ஊர்வலத்தில் பங்கேற்க விரைந்தனர்!!

இரண்டு நாள் கழித்துதான் நான் அறிந்தேன் அது என் நண்பர் தண்டபாணியின் மகன் என்பது ,சம்பவம் நடந்து 5 நிமிடம் கழித்து நானும் அங்கு இருந்தேன்.

கல்வி கடன் கொடுத்த வங்கியும் உடன் கடனைத் திருப்பிக் கேட்கிறது!!

No comments: