திருவிடைக்கழி திருத்தலமும் குரா மரமும்
திருக்கோவில் தல விருட்சங்களில் மிகவும் அபூர்வமான ஒன்று குரா மரமாகும்.தமிழ்நாட்டில் முருகப் பெருமானுக்கென்று உள்ளத் திருத்தலங்களில் குரா மரத்தினைக் தன்னகத்தே தலவிருட்சமாகக் கொண்ட திருவிடைகழி மிக பிரசித்திப் பெற்ற திருத்தலமாகும்.இக்குரா மரத்தினடியில் முருகப் பெருமான் விரும்பி காலாற நடந்து ,உலா வந்து மற்றும் சிவப் பெருமானை பூஜித்து வரம் பெற்றார்.
அருணகிரி நாதரும் கந்தனைப் பாடி போற்றி அஷ்டமாசித்திகள் அடைந்த அற்புதமானத் திருத்தலம்..
அதிசயம் பல நிறைந்த குரா மரத்தின் பூக்களை அனைத்து மதத்தினரும்,மற்றும் அனைத்து தெய்வங்களுக்கும் அணிவித்து மகிழ்வர்.இம்மலரைப் போற்றாத சமய இலக்கியமே இல்லை எனலாம்.
இம்மரத்தை தல விருட்சமாகக் கொண்ட ஒரேத் திருத் தலம் திருவிடைக்கழி ஆகும்.இம்மலரில் முருகனது திருப்பாதம் ஒளிந்து உள்ளது என்று திருப்புகழில் அருணகிரி நாதர் போற்றி உள்ளார்.
“சிறக்கு மாதவர் முனிவரர் மகபதி இருக்கு வேந்தனும் இமையவர் பரவியதிருக்குராவடி நிழல்தனில் உலவியப் பெருமானே”
வெளிப் பிராகாரத்தை வலம் வரும்போது வடக்கே குரா மரம் பிரம்மாண்டமாகக் காட்சி தருகிறது..மலைப் பிரதேசத்தில் மட்டுமே காணப்படும் இம்மரம் வயல் சூழ்ந்த மருத நிலத்தில் காணப்படுவது அரிதான ஒன்று..இங்கே யோக சுப்பிரமணியர் என்றத் திருநாமத்துடன் முருகர் சிவப் பெருமானை பூஜித்தார்.
இங்கே இதனருகேயே மகிழ மரம் ஒன்று இருக்கிறது.இது இத்தலத்தில் உள்ள பாபநாச பெருமானுக்குறிய தலவிருட்சமாகும்.
ஆம் இரண்டு தல விருட்சம் ,கருவறையில் இரண்டு பெருமான்,இரண்டு கோபுரம்,இரண்டு சண்டிகேஸ்வரர் என்று இரண்டிரண்டாக காணப்படுவது மிக்கச் சிறப்பு வாய்ந்ததாகும்.
திருமணத்தடை நீக்கி திருமணம் கைகூட நிகழ்த்தபடும் வழிபாடுகள் மூலம் விரைவில் திருமணம் நடைபெறுகிறது என்பது சத்தியம்....
இத்திருத்தலம் மயிலாடுதுறை அருகே திருக்கடவூர் கோவில் மற்றும் தில்லையாடித் திருத்தலத்தின் அருகே உள்ளது..
வாய்ப்பு கிடைப்பவர்கள் சென்று வாருங்கள்.
இல்லையேல் முருகப் பெருமானையும்,குரா மரத்தினையும் நினைத்து பிரார்த்தணை செய்யுங்கள்.. முருகன் அருள் கிட்டுவது திண்ணம்,,,,
No comments:
Post a Comment