கால் பந்தாட்டமும் வாழ்க்கையும்
தற்போது உலக கால் பந்தாட்டப் போட்டி முடியும் தருவாயில் உள்ளது.எதிர்பாராத விதமாக ஜெர்மனியை வீழ்த்தி இரண்டு கோல் போட்டு இத்தாலி இறுதி சுற்றுக்கு தயராகிவருகிறது.பிரான்ஸின் கதியும் தெரிந்துவிடும்.அதுக்கு இப்போ என்ன என்கிறீர்களா!!
இல்லை அத்துடன் வாழ்க்கையும் கொஞ்சம் பொறுத்தி பார்ப்போம்.
கால் பந்தாட்டத்திற்கு எது தேவை?பந்துதான் கட்டாயம் தேவை!!ஆனால் பந்திற்கு காற்று முக்கியமாயிற்றே!எத்தனை நேரம் பந்தை உதைக்க முடியும்?
காற்றுடன் கூடிய பந்துதான் நம் வாழ்க்கையும்!!காற்று இருக்கும்வரைதான் பந்திற்கு மதிப்பு!
ஆம் பந்துதான் நம் வாழ்க்கை.!
நாம் வாழும் வாழ்க்கைதான் கால்பந்தாட்டம்..
ஒரு பக்கம் நல் இயல்புகள் ஆறு.மறு பக்கம் கெட்ட இயல்புகள் ஆறு!
காமம்,குரோதம்,லோபம்,மோகம்,மதம்,மாற்சரியம் ஒரு பக்கம்.
சத்தியம்,தர்மம்,சாந்தி,பிரேமை,அஹிம்சை,பிரகிருதி ஆகியவை மறு பக்கம்.
இரண்டிற்கும் நடுவே இருப்பதே இலக்கு அதாவது GOAL.இரண்டுக்கும் இடையே பந்தை எந்த இலக்கை நோக்கி அடிக்கப் போகிறீர்கள் என்பதுதான் வாழ்க்கை. நல்வழி நோக்கி அடிப்பதா தீய வழி நோக்கி அடிப்பதா இல்லை எங்கு வேண்டுமானாலும் போகட்டும் என்று விட்டுவிடுவீர்களா!!
சத்ய சாய்பாபாவின் பக்தை கூறிய கருத்து.