Sunday, April 09, 2006

திருக்கடவூரும் மார்க்கண்டேயரும்!!

திருக்கடவூரும் மார்க்கண்டேயரும்!!
***************************************
திடீரென திருக்கடையூர் ஸ்தலம் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது!!பீஷ்மரத சாந்தி என்றழைக்கப்படும் எழுபதாவது பிறந்தநாள் விழா அது!!



மார்க்கண்டேயரின் வரலாறு நாம் அனைவரும் அறிந்ததே!தான் பதினெட்டு வயதில் இறக்கப் போவதை அறிந்தும் கவலையுறாமல் சிவ வழிபாடை நம்பிக்கையுடன் செய்தவர்..இந்த நம்பிக்கை ஒன்றே அவரை வாழவைத்தது!!குறிப்பிட்ட வயது அடைந்ததும் எமன் மார்க்கண்டேயன் உயிரை பறிக்க வருகிறான்!அதை அறிந்தும் சிவ வழிபாட்டையே தொடர்ந்து செய்கிறான்.வழிபாடு முடித்து வருவதாக காலனுக்கு உரைத்தும் காலன் கேட்கவில்லை!!நேரம் முடிந்ததே என்றுப் பாசக் கயிற்றை வீச அது எம்பிரான் சிவன் கழுத்திலும் விழுகிறது!!கோபம் கொண்ட சிவன் யமனை எரித்து மார்க்கண்டேயனுக்கு நீண்ட ஆயுளை வரமாகத் தருகிறான்!!மார்க்கண்டேயன் இன்றும் நம்மிடையே வாழ்ந்து சிவபூசை செய்வதாக நம்பிக்கை உண்டு!!

நாம் எடுத்துக்கொள்ளவேண்டியது என்னவெனில் முழுமனதுடன் நம்பிக்கையுடன் கடவுள் பூசை செய்வோமானால் விதியும் மாறும் என்பதாகும்!!
இனி திருக்கடவூரில் எங்கள் குழுமத்தில் இருந்த அனைத்துப் பெண்களுமே என்னை வில்லனாக்ப் பாவிக்கத் தொடங்கினர்!!ஏற்கனவே வில்லந்தான் என்கிறீர்களா!! திடிரென என்னை வில்லனாக கருதியது ஏன்!!
சுமார் இருபது வருடங்களுக்கு முன் இத்திருக்கோயில் சாதாரண அத்தனை கவனிப்பாரில்லாமல்தான் இருந்து வந்தது!!பிறகு இந்த -ஷ-ஷ்டியப்தப்பூர்த்தி அறுபதாம் பிறந்த நாள் விழாக் கொண்டாடும் வழக்கம் ஆரம்பித்து பிறகு எழுபது,என்பது ஏழை,பணக்காரர் என்ற வித்தியாசமின்றி இன்று கால் வைக்க இடம் இல்லாமல் அத்த்னைக் கூட்டம்!அத்தனை நம்பிக்கை!!
என்னை வில்லனாக பாவித்த மேட்டருக்கு வருவோம்!!எற்கனவே பஸ் ஸ்டாண்டில் என்ன வேடிக்கைப் பார்த்தேன் என்ற ராமபிரான் கேள்விக்கு இன்னும் பதிலளிக்கவில்லை!!(மறந்திருப்பார் என்று நினைக்கிறேன்,! எல்லாம் ஒரு நம்பிக்கைதான்!!)

இங்கு கோயில் உள்ளே பல ஜோடிகளின் அறுபதாம் ஆன்டு விழாவை ரசித்துக் கொண்டிருந்தேன்!!என்ன வித்தியாசம் திருமணத்தில் மணமகன் கம்பீரமாக வீற்றிருப்பான்!!மணமகள் மட்டும் சிறிது அடக்கத்துடன் வெட்கமாக( ! ) உட்க்கார்ந்திருப்பாள்!இங்கு தாத்தாமார்கள் வெட்கத்துடன் இருக்க ,பாட்டிமார்கள் பேரன், பேத்தி எடுத்த பெருமையில் கம்பீரமாக உட்க்கார்ந்திருந்தனர்!!தாத்தாக்கள் டெந்ஷனாகவும் பாட்டிக்கள் ரிலாக்ஸ்டாகவும் இருந்தனர்!!திடீரென வேடிக்கைப் பார்க்கும் வேளையில் ஒரு ஜோடியைக் கண்டுத் திகைத்தேன்!!ஜோடி என்றால் இரண்டு பேர்தானே!!
ஆனால் இது மூன்று பேர் உள்ள ஜோடி1!ஆமாம் ஒரு கணவன் இர்ண்டு புறமும் இரண்டு மனைவிகளுடன் அமர்ந்திருந்து மந்திர கோஷம் முழக்க விழாவைக் கொண்டாடிக் கொண்டு இருந்தார்!!ஆனால் உறவினர் யாருமில்லை!!
இந்த வித்தியாசமான நிகழ்வை நான் வந்திருந்த விழாவில் ஒரு சிலரிடம் கூறியதுதான் தாமதம்!!தீ பிடித்தது போல் எங்கே எங்கே என்று பார்க்க ஓடினர்!1அவர்கள் வந்து சிலரிடம் சொல்ல ஒரு பத்து நிமிடத்தில் அனைவருமே சென்று இவ்வித்தியாச ஜோடியை தரிசித்துவிட்டு வந்தனர்!!வந்த அனைவருமே தங்கள் மனைவியிரிடம் இதை பெருமையாகக் கூற அந்த பெண்மணிகள் அனைவருமே என்னை வில்லனாக பாவிக்கத் தொடங்கி என்னை முறைக்கத்தொடங்கினர்!!

ஆச்சரியம் என்னவெனில் ஒரு பெண்மணி கூட அந்த ஜோடியைப் பார்க்கபோகவில்லை!!கணவர்களை பார்த்து " போதும் !! ரொம்ப வழியாதிங்க!!"என்றுக் கண்டிப்பதிலேயே குறியாக இருந்தனர்!!சரி!!நீங்களும் என்னை வில்லனாப் பாக்காதிங்க!!திருக்கடையூர் மூன்றுப் புகைப்படத்தின் மூலம் இறைவனை தரிசியுங்கள்!!

Thursday, April 06, 2006

நம்பிக்கை வீண் போவதில்லை!





நம்பினோர் கெடுவதில்லை நம்பிக்கை வீண் போவதில்லை!
நண்பர்களே இவ்வார விழிப்பாட்டின் மூலம் நாம் செய்யும் பிரார்த்தணைக்கு பதில் கிடைத்துள்ளது!!இறைவன் கண் திறக்க ஆரம்பிக்கிறான்!! குழந்தை தெல்காவை குறித்த முக்கிய தகவல் புகைப்படம் கிடைத்துள்ளது!! கூடிய விரைவில் அவன் கிடைப்பான் என்ற நம்பிக்கையில் மீண்டும் நாம் பிரார்த்திக்கொண்டே இருப்போம்!!

Saturday, April 01, 2006

ஞானவெட்டியான் அய்யாவுடன் ஒரு சந்திப்பு!!

ஞான வெட்டியான் அய்யாவுடன் ஒரு சிறிய சந்திப்பு
சில நாட்களாக பர பரப்பாக பேசப்பட்ட ஞான வெட்டியான் அய்யா நேற்று மதியம் என்னுடன் தொலை பேசியில் உடன் சிதம்பரம் வர அழைத்தார்! அலுவல் காரணமாக இன்றுதான் செல்லமுடிந்தது!!
இன்று அதிகாலை மூன்று மணிக்கே விழிப்பு வந்துவிட்டது பயத்தில்தான்!!எங்கே மீசைக்காரரை சந்திப்பதில் தாமதம் ஆகிவிடுமோ என்று!!
பேருந்தில் ஒண்றரை மணி நேர பயணம்!!சிதம்பரம் பேருந்து நிலையத்தில் சிறிது வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்!!நான் நினைத்தது அவர் பயணக் களைப்பில் தூங்கிக் கொண்டிருப்பார் ,எனவே தொந்தரவு செய்யவேண்டாம் என்று!!மெதுவாக அவர்கள் தங்கியுள்ள ஹோட்டலை நோக்கி நடக்கத் தொடங்கினேன்!!அங்கே தெரு முணையிலேயே ஆஹா!! நமது அய்யாதான்!!காலை 6 மணியிலுருந்தே எனக்காக தெரு முணையிலேயே காத்துள்ளார்!!!
பிறகு அய்யா,அய்யாவின் துணைவியார் ஜெயலக்ஷ்மி அம்மாள் மற்றும் அவரது வளர்ப்பு மகள் சித்ரா, ஒட்டுனர் ரமேஷ் ஆகியோருடன் சிதம்பரம் அம்பலத்தரசன் நடராசனின் ஆலயத்தை சென்றடைந்தோம்.
திவ்ய தரிசனம்!!பொன்னம்பலம்,சிதம்பர ரகஸியம் ஆகியவற்றை மெய்மறந்து தரிசித்தோம்!!
சிவகாம சுந்தரி ,கைலாஸநாதரை லிங்கதரிசனத்துடன் ,கால பைரவர் சூரிய பகவான் அவர்களை வணங்கி வந்தோம்!!
ஆனால் ஒரு வருத்தம் சிதம்பரம் கோயிலில் பொதுமக்கள் சிலர் செய்யும் அசிங்கம் ,மற்றும் தீஷிதர்களின் பணம் வசூல் செய்யும் போக்கு அப்படியேத்தான் உள்ளது!!
பின்பு வெளியே கிரிஷ்ன மாமாஹோட்டலில் ஒரு பிடி பிடித்தோம்!!
நேற்று மதியம்தான் சிதம்பரத்திற்கே வந்துள்ளார்!! அதற்குள் கிரிஷ்ண மாமா, அம்பி ஆகியோர் அவரை பயங்கரமாக உபசரித்தனர்!! மதியம் சாப்பிட வந்துடுங்கோ என்ற அன்புக் கட்டளை வேறு!!
ஜெயலக்ஷ்மி அம்மா ஒரு அன்பு நிறைந்த குணவதி!! என்னை மற்றத் தலங்களுக்கும் வரும்மாறு கட்டளையிட்டார்!!
திண்டுக்கல் வர அழைப்பு விடுத்தார்!!
அவர் மகள் சித்ரா அடக்கம் ,நகைச்சுவை உணர்வு உடையவர்!!
நம்பிக்கை ராமர் காசிக்கு வழியனுப்பியதை அய்யா நினைவு கூர்ந்தார்!
மன்சூர் ராஜா,சிவசங்கர்,விஜி அம்மணி ,விழியா மற்றும் அனைவரையும் நினைவு கூர்ந்தார்!!
11 மணி அளவில் நடராஜர் ,மற்றும் ஞானம் அய்யாவின் தரிசனம் முடிந்து கடலூர்
திரும்பினேன்!

மன்னிக்க!!அவ்வளவு அவசரமா போட்டோ எல்லாம் போடமுடியுமா!!அய்யா ஊருக்குப் போய் அனுப்பறேன் என்று சொல்லியுள்ளார்!! அப்போது போடுகிறேன்!!இன்னக்கி ஏப்ரல் 1 பாருங்க!!!!!): (: ):