Sunday, April 09, 2006

திருக்கடவூரும் மார்க்கண்டேயரும்!!

திருக்கடவூரும் மார்க்கண்டேயரும்!!
***************************************
திடீரென திருக்கடையூர் ஸ்தலம் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது!!பீஷ்மரத சாந்தி என்றழைக்கப்படும் எழுபதாவது பிறந்தநாள் விழா அது!!



மார்க்கண்டேயரின் வரலாறு நாம் அனைவரும் அறிந்ததே!தான் பதினெட்டு வயதில் இறக்கப் போவதை அறிந்தும் கவலையுறாமல் சிவ வழிபாடை நம்பிக்கையுடன் செய்தவர்..இந்த நம்பிக்கை ஒன்றே அவரை வாழவைத்தது!!குறிப்பிட்ட வயது அடைந்ததும் எமன் மார்க்கண்டேயன் உயிரை பறிக்க வருகிறான்!அதை அறிந்தும் சிவ வழிபாட்டையே தொடர்ந்து செய்கிறான்.வழிபாடு முடித்து வருவதாக காலனுக்கு உரைத்தும் காலன் கேட்கவில்லை!!நேரம் முடிந்ததே என்றுப் பாசக் கயிற்றை வீச அது எம்பிரான் சிவன் கழுத்திலும் விழுகிறது!!கோபம் கொண்ட சிவன் யமனை எரித்து மார்க்கண்டேயனுக்கு நீண்ட ஆயுளை வரமாகத் தருகிறான்!!மார்க்கண்டேயன் இன்றும் நம்மிடையே வாழ்ந்து சிவபூசை செய்வதாக நம்பிக்கை உண்டு!!

நாம் எடுத்துக்கொள்ளவேண்டியது என்னவெனில் முழுமனதுடன் நம்பிக்கையுடன் கடவுள் பூசை செய்வோமானால் விதியும் மாறும் என்பதாகும்!!
இனி திருக்கடவூரில் எங்கள் குழுமத்தில் இருந்த அனைத்துப் பெண்களுமே என்னை வில்லனாக்ப் பாவிக்கத் தொடங்கினர்!!ஏற்கனவே வில்லந்தான் என்கிறீர்களா!! திடிரென என்னை வில்லனாக கருதியது ஏன்!!
சுமார் இருபது வருடங்களுக்கு முன் இத்திருக்கோயில் சாதாரண அத்தனை கவனிப்பாரில்லாமல்தான் இருந்து வந்தது!!பிறகு இந்த -ஷ-ஷ்டியப்தப்பூர்த்தி அறுபதாம் பிறந்த நாள் விழாக் கொண்டாடும் வழக்கம் ஆரம்பித்து பிறகு எழுபது,என்பது ஏழை,பணக்காரர் என்ற வித்தியாசமின்றி இன்று கால் வைக்க இடம் இல்லாமல் அத்த்னைக் கூட்டம்!அத்தனை நம்பிக்கை!!
என்னை வில்லனாக பாவித்த மேட்டருக்கு வருவோம்!!எற்கனவே பஸ் ஸ்டாண்டில் என்ன வேடிக்கைப் பார்த்தேன் என்ற ராமபிரான் கேள்விக்கு இன்னும் பதிலளிக்கவில்லை!!(மறந்திருப்பார் என்று நினைக்கிறேன்,! எல்லாம் ஒரு நம்பிக்கைதான்!!)

இங்கு கோயில் உள்ளே பல ஜோடிகளின் அறுபதாம் ஆன்டு விழாவை ரசித்துக் கொண்டிருந்தேன்!!என்ன வித்தியாசம் திருமணத்தில் மணமகன் கம்பீரமாக வீற்றிருப்பான்!!மணமகள் மட்டும் சிறிது அடக்கத்துடன் வெட்கமாக( ! ) உட்க்கார்ந்திருப்பாள்!இங்கு தாத்தாமார்கள் வெட்கத்துடன் இருக்க ,பாட்டிமார்கள் பேரன், பேத்தி எடுத்த பெருமையில் கம்பீரமாக உட்க்கார்ந்திருந்தனர்!!தாத்தாக்கள் டெந்ஷனாகவும் பாட்டிக்கள் ரிலாக்ஸ்டாகவும் இருந்தனர்!!திடீரென வேடிக்கைப் பார்க்கும் வேளையில் ஒரு ஜோடியைக் கண்டுத் திகைத்தேன்!!ஜோடி என்றால் இரண்டு பேர்தானே!!
ஆனால் இது மூன்று பேர் உள்ள ஜோடி1!ஆமாம் ஒரு கணவன் இர்ண்டு புறமும் இரண்டு மனைவிகளுடன் அமர்ந்திருந்து மந்திர கோஷம் முழக்க விழாவைக் கொண்டாடிக் கொண்டு இருந்தார்!!ஆனால் உறவினர் யாருமில்லை!!
இந்த வித்தியாசமான நிகழ்வை நான் வந்திருந்த விழாவில் ஒரு சிலரிடம் கூறியதுதான் தாமதம்!!தீ பிடித்தது போல் எங்கே எங்கே என்று பார்க்க ஓடினர்!1அவர்கள் வந்து சிலரிடம் சொல்ல ஒரு பத்து நிமிடத்தில் அனைவருமே சென்று இவ்வித்தியாச ஜோடியை தரிசித்துவிட்டு வந்தனர்!!வந்த அனைவருமே தங்கள் மனைவியிரிடம் இதை பெருமையாகக் கூற அந்த பெண்மணிகள் அனைவருமே என்னை வில்லனாக பாவிக்கத் தொடங்கி என்னை முறைக்கத்தொடங்கினர்!!

ஆச்சரியம் என்னவெனில் ஒரு பெண்மணி கூட அந்த ஜோடியைப் பார்க்கபோகவில்லை!!கணவர்களை பார்த்து " போதும் !! ரொம்ப வழியாதிங்க!!"என்றுக் கண்டிப்பதிலேயே குறியாக இருந்தனர்!!சரி!!நீங்களும் என்னை வில்லனாப் பாக்காதிங்க!!திருக்கடையூர் மூன்றுப் புகைப்படத்தின் மூலம் இறைவனை தரிசியுங்கள்!!

7 comments:

குமரன் (Kumaran) said...

மதுரையிலும் இப்படித் தான் நடேசன் சார். ஒரு மணமகன் இரண்டு மணமக்களுடன் அமர்ந்து தான் விழா கொண்டாடுவார்கள். என்ன ஒரு மணமகள் கொஞ்சம் அடக்கம் அதிகம் - பிரியாவிடை என்று தன் கணவனைப் பிரியாமல் அமர்ந்திருப்பாள். இன்னொரு மணமகள் தான் ஆட்சியெல்லாம். :-)

திருமாலிருஞ்சோலையில் (அழகர் கோவிலில்) ஒரு மணமகன் நான்கு மணமகளைப் பார்த்திருக்கிறேன். எல்லாம் அவங்களுக்கு வந்த வாழ்வு.:-)

சிவமுருகன் said...

உங்கள் மூலம் காலஹரனின் தரிசனம் கண்டேன்.

வித்யாசமான பயண அனுபவம்.

rnatesan said...

நன்றி,
குமரன் ,சிவமுருகன்!!
என்ன செய்தாலும் உலகம் திருந்துமா!!தெரியவில்லை!!

Anonymous said...

:)
அழகதான் எழுதிரீங்க நண்பா. ஆனால் ஏன் நிறைய எழுதுவதில்லை?
நீங்க சொன்ன மார்கேண்டேயேன் கதையை நானும் படித்து இருக்கிறேன். ஆனால் ஒரு சிறு கேள்வி.. சிவன் எமனை எரித்து விட்டார் என்று சொன்னீங்களே.. அப்புரம் என்ன நடந்தது? எமன் எப்படி திரும்பி வந்தார் என்று சொல்லலேயே:)
எனக்கு தெரியாது அதான் இந்த கேள்வி:)

rnatesan said...

தங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி!!
மீண்டும் தேவர்கள் எல்லாம் ,அபிராமி அம்மன் தலைமையில் சிவபெருமானை வேண்டுகின்றனர்!!காலன் இல்லையேல் உலகம் இயங்குவது எப்படி!!சிவனும் மீண்டும் காலனை உருவாக்குகிறார்!!
படிக்கவே நேரம் சரியாகிவிடிகிறது!!படைப்பதை குறைத்தால் எழுதலாம்!!

Anonymous said...

திருக்கடவூரென்றாலே! ஞாபகம் வருவது; அபிராமி அம்மனும்;அபிராமி அந்தாதியும்; இங்கே மார்க்கண்டேயருக்கும்; சிறப்புண்டென்பதுடன் ,அறுபதாம் கல்யாணம் காணுபவர்களுக்கு ,விசேச மென்பதும் எனக்குப் புதிய தகவல்கள்!!; நன்றாக உள்ளது.
யோகன் பாரிஸ்

rnatesan said...

நன்றி ஜோஹன்!!
தங்களுடன் சாட் செய்யமுடியவில்லையே!!