Saturday, January 21, 2006

real to accept

கற்றோரைக் கற்றோரேக் கற்றோரேக் காமுறுவர்

நல்லோரைக் காண்பதும் நன்றே நல்லோர் சொல் கேட்பதும் நன்றே

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லாருக்கும் பெய்யும் மழை!

முனிவிலும் நல்குவர் மூதறிஞர் உள்ளக்கனவிலும் நல்கார் கயவர்,நனிவிளைவில் காயினும் ஆகும் காதலிதான் எட்டிப்பழுத்தாயினும் ஆமோ அறை!
பந்தலின் முகப்பில் வாழையினைக் கட்டுகிறோம் வாழையடி வாழையாக வாழவேண்டுமென்று!இவ்வாழையைக் குறித்து சிறிது சிந்திப்போமா!

வாழைத் தன்னை வெட்டுபவருக்கும் காயாக இருந்தாலும் பலன் தருகிறது!

பழுத்தால்தான் பயன் தரும் என்றில்லை!பூ,பிஞ்சு,காய்,கனி ,இலை,தண்டு,மட்டை என்று பயன்கள் ஏராளம்.இப்போது எட்டி மரத்தை பார்ப்போமா!எட்டி மரம் காய் என்றில்லை ,பழமாக இருந்தாலும் மக்களுக்கு பயன்படுவதில்லை.!

நல்லோர்கள் எத்துனை துன்பம் ஏற்படினும் அறநெறியிலிருந்து வழுவார்.செய்யத்தகாதவற்றை செய்யார்.சொல்லத் தகாதன சொல்லார்.நினைக்க ஒண்ணாதவற்றை நினையார்.

நல்லாற்றொழுக்கின் தலை நின்றார் நல்கூர்ந்தும் அல்லன்செய்தற் கொருப்பார் பற்பொழிய

செங்கட் புவியேற்றப் பசித்தும் தின்னாவாம்

பைங்கட் புனத்த பைங்கூழ்.

சந்தனம் அரைத்தாலும் மணம் கமிழும்,அகில் புகைத்தாலும் கமழும்,சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.எத்துனைத் துன்பம் நேரினும் நல்லோர் தங்கள் தகுதியினின்றும் குறைவு படார்!கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே!

இன்னாசெய்தாருக்கும் இனியவையே செய்யும் சார்பு படைத்தவர் நல்லோர்.

தம்மை அவமதிக்க வந்த மிகக் கொடியவர்களாகிய துரியோதனன் முதலியோரை த் தருமர் வனத்தின் இடையில் வரவேற்று இன்னுரைப் பகர்ந்தார்!அறிவுரை கூறினார்.!குபேரன் தனக்கு அளித்த ஆடை,அணிகலன்களை அளித்து இன்முகத்துடன் உபசரித்து ஊருக்கு அனுப்பி வைத்தார்.

தீர்வரும் இன்னல் தம்மைச் செய்யினும்

சிந்தை பேரருளாள்ற்தத்ஞ் செய்கையில் பிழைப்ப்

துண்டோகார்வரை நிறுவித் தன்னைக் கணலெழக் கலக்கக் கண்டும்

ஆர்கலி அமருய்ய அமுது பண்டளித்தே தன்றே.

தேவர்கள் இனிய பாற்கடலில் மந்திர மலையை விடுத்து கடலை கலக்கி துன்புற்த்தினர்.பாற்கடலோ அவர்களுக்கு அமுதத்தை அல்லவா அள்ளித் தந்தது.

நல்லோர் என்போர் அகிலாண்டக் கோடி பிரமாண்ட நாயகன் உள்ளத்தில் எழுந்தருளினால் எத்தகையப் பேறுக்கிடைத்திடுமோ அதைப் போலத் தன்மை உடையவர். நல்லோர் ,பொன், பொருள் ,நிலம் ,ஆடை யாவும் விண்மீனுக்கு ஒப்பகும்.சூரியனானது வானத்தில் ஒளிர்ந்து உலகை ஒளிமயமாக்குவதுப் போல் நல்லோர் உலகை வழி நடத்திச் செல்லும் உத்தமர்கள்.நல்லோர்களின் பாதச்சுவடைப் பின் பற்றி நாமும் நல்லோராக அவர்களின் வழி நின்று மிளிர்வோம்.!

"நல்லோரின் சேர்க்கை புத்தியில் மந்தத்தைப் போக்குகிறது.பேச்சில் உண்மையை வரவழைக்கிறது.மேலான கௌரவத்தைக் கொடுக்கின்றது.பாபத்தை போக்கும்.குறிப்பாக மனதைத் தெளிவாக்கும்.பல திக்குகளில் புகழைப் பரப்பும்.நல்லோர்களின் சேர்க்கை எதைதான் கொடுக்கவில்லை!என்பது பெரியோரின் வாக்கு!"

Saturday, January 07, 2006

hayagreaver

" ஞானானந்தமயம் தேவம்
நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யானம்
ஹயக்ரீவம் உபாஸ்மஹே"

ஒரு சிறிய ப்ரச்னை!

புள்ளைங்கப் படிக்கமாட்டேங்குது!கவலை படாதீர்கள்!கடலூர் அருகே இருக்கும் திருவஹீந்திபுரத்தில் ஹயக்ரீவரைத் தரிசியுங்கள்!கூடவே கண்டிப்பா படிக்கவும் சொல்லுங்க!
ஒருப் பையனைக் காலைலே அப்பா எழுப்பிவிட்டாராம்.பையன் சொன்னானாம் ! அப்பா நம்பதான் ஹயக்ரீவர் ஐ கும்பிடறமே, இன்னும்மா படிக்கனும் என்றானாம்,!!!