Wednesday, July 21, 2010

தில்லையாடி prayer



ஸ்ரீ பெரியநாயகி துணை

காப்பு - விக்கிரம விநாயகர்
நல்ல செல்வமெய்ஞ் ஞானம் புகழ் தரும்
தில்லையாளிச் சிவன் கதை தென்சொலால்
சொல்ல விக்கிரம சோழ விநாயகர்
வல்ல பாதம் வணங்கி வழுத்துவாம்.

சரணாகத ரட்சகர்

மாமேவு பரஞ்சோதி சச்சிதானந்த மயமுல்லாசம்
தேமேவு வேதாந்த தெளிவுவியா பகன் கருணை திகழு மூர்த்தி
காமேவு திருந்தில்லை யாளி யான் சார்ந்தாரைக் காத்த நாதன்
பூமேவு பாதமலர் போதமலர் புனைந்து தினம் புகழ்ந்து வாழ்வாம்.

பெரியநாயகி
மருமருவு மலர்கொடியை வேதமுடி விளங்கு சுடர் மணியை ஞானப்
பொருளுதவு செழந்தருவைப் புவனமெல்லாம் ஈன்றபகம் பூவை யானை
அருணயன பூரணியை ஆரணியை த் திருத் தில்லையாளி வாழ்வை
இரு நிலம் வானகம் அயன்மால் புகழ் பெரியநாயகியை இறைஞ்சி வாழ்வாம்.

சுப்பிரமணியர்
அஞ்சு தலை அமரருறாது அஞ்சுதலை யானரு மயிலோன் சூரன்
விஞ்சியெழு தலைநாலு தலையாகத் தூதுரைத்த வீரன் முன்னோன்
தஞ்சமெனும் பக்தருக்கே ஆறுதலை யாயாறு தலைசேர் கோமான்
செஞ்சரண தாமரையை ஒருதலையாய்ப் பணிதலையே செய்குவோமே.