Sunday, August 27, 2006

வேளாங்கன்னி அன்னைக்காக நடைபயணம்.

ஒரு மனிதன் ஒரு நாளைக்கு எத்தனை தூரம் நடக்கமுடியும்..காலையில் நடை பயிற்சி மேற்கொள்பவர்கள் சொல்லாட்டும்.6 கிமீ முதல் 10 கிமீ வரை இருக்குமா.அதுவும் பாதி பேர் வாக்கிங்க் போவதாக பாவலா செய்துவிட்டு தம் போட்டுவிட்டு களைப்பாக வீடு திரும்புவர் ,என்னைப் போல்!!
தம்மைத் தவிர்த்து.!

ஆனால் புனித அன்னைக்காக சென்னை மற்றும் இதர இடங்களில் இருந்து காவி உடையுடன் சிறுவர்,சிறுமி,வாலிப ,வயோதிக ஆண் ,பெண் அனைவரும் சாரி சாரியாக செல்லும் காட்சி மிகுந்த வியப்பை அளிக்கும்.பணக்கார ஏழை என்ற பாகு பாடில்லாமல் கிடைத்த இடத்தில் ஓய்வு எடுத்து,உண்டு ,உறங்கி ஆஹா என்னவொரு காட்சி!!

எங்கள் நிறுவனம் சென்னை வேளாங்கன்னி சாலயில் அமைந்திருப்பதால் தினமும் அவர்கள் வேகமாய் நடந்து செல்லும் காட்சி என்னை மிகவும் ஈர்க்கும்!

பல வருடங்களாக நடக்கும் நிகழ்ச்சிதான் என்றாலும் இவ்வருடம் சற்று அதிகம் என் கவனத்தை ஈர்த்தது!!அது என் நண்பர் திரு தாமஸ் மூலம்!!இவ்வருடம் அவரையும் அவரது குழுவினரையும் எங்கள் வாயிலில் வரவேற்கவும் சிறிது உபசரிக்கவும் முடிவு செய்தேன்.
அதாவது 28 ஆகஸ்ட் வேளாங்கன்னி கோயிலில் கொடியேற்றம் மற்றும் 10 நாள் திருவிழா.அநேகமாக கொடியேற்றத்தில் அனைவரும் பங்கு பெறுகின்றனர்!!

போன வியாழன் அன்று தாமஸ் தொலை பேசியில் அழைத்தார்.
நடேஷன் !! பாண்டிச்சேரி வந்துவிட்டேன்!!நாளை மதியம் உங்களை மீட் பண்ரேன்.29 பேர் எங்கள் குழுவில் என்றார்
.மகிழ்ச்சியாய் இருந்தாலும் கவலையாகவும் இருந்தது.ஏனெனில் 29 பேரை உபசரிக்க எங்கள் காண்டீனில் வசதி இல்லை.மேலும் நுழைவு வாயில் அருகே இருப்பது சிறிய சமையல் கூடம் மட்டுமே!!
கடலூருக்கும் எங்கள் நிறுவனத்திற்கு இடையே உள்ள் தூரம் 18 கிமீ.
வெள்ளி காலை எங்கள் பிராதான வாயிலில் உள்ள செக்யூரிட்டி அதிகாரி மற்றும் காவலர்களிடம் அவர்கள் வரப் போவதை தெரிவித்தேன்.அவர்கள் அனைவருமே அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
மிக்க மகிழ்ச்சி அடைந்து ‘’ சார் !!அவர்கள் உங்களுக்கு மட்டும் விருந்தினர்கள் அல்லர்!!எங்களுடைய விருந்தினர்களும்தான்!!”
நான் திரும்பவும் கடலூர் சென்று வருபவர்களுக்கு தேவையான தண்ணீர்,பிஸ்கெட்,ஸ்நாக்ஸ்,வாங்கும் போது ஒரு அன்பரை சந்தித்தேன்.அவர் மட்டும் என் கவனத்தை ஈர்த்த காரணம் அவர் ஒரு கம்பளியை போர்த்தியிருந்துதான்.அவர் சென்னையிலிருந்து தனியே வருபதாகவும் பாதி வழியிலேயே கடும் குளிர் காய்ச்சல் என்றும் எப்படியோ அன்னையை தரிசிக்க வேண்டும் என்ற ஆவலினால் நிற்காமல் செல்வதாகவும் கூறி வேகமாக சென்றுவிட்டார்.
மதியம் அருகே உள்ள ஊரில் அனைத்து நண்பர்களும் பகலுணவை முடித்த பின் சிறிது ஓய்வு எடுத்து 3 மணி அளவில் எங்கள் நிறுவனத்தை அடைந்தனர்!முடிந்த அளவு கிடைத்ததை வைத்து உபசரித்தோம்.கிடைத்த இடத்தில் அனைவரும் ஓய்வு எடுத்தனர்.அன்புடன் உரையாடினர்.பலரும் வெளிநாட்டில் நல்ல வேலையில் இருப்பவர்கள்.
பின் அனைவரும் ஒன்று சேர்ந்து எனக்காகவும் என் குடும்பத்தினருக்காகவும் ஒரு வழிபாடை வேளாங்கன்னி அன்னையிடம் நிக்ழ்த்தினார்கள் பாருங்கள்.என் கண்களில் ஆனந்த கண்ணீர் இப்போதும்.
அவர்கள் பயணம் அனைத்துமே நல்ல முறையில் திட்டமிடப் பட்டவை.

ஒரு நாளில் சராசரியாக 40 கிமீ நடக்கிறார்கள்.
திரும்பும்போது பஸ்,ரயில்களில் பயணிக்கின்றனர்.

இப்போது மணி மாலை 5.00. எல்லோரையும் வழி அனுப்பிவிட்டு நிற்கின்றேன்.

ஓ!காலையில் சந்தித்தேனே கம்பளி போர்த்திய மனிதர்!!அவர் இப்போது 20 கிமீ நடந்து என்னை நோக்கி புன்முறுவல் வீசிவிட்டு சென்றார்!!

ஓ !!அதில்தான் எத்தனை அர்த்தங்கள்!

அன்னையே !!ஆசிர்வதியுங்கள் எங்களை!!!!

9 comments:

Anonymous said...

Anna

It is your blog????

Good... Really wonderful article

Keep writing

Themba

ENNAR said...

அவர்கள் செயலை நான்குறை சொல்ல வில்லை அவர்கள் சின்ன குறுகலான இடங்களில் செல்லும் போது போக்கு வரத்துக்கு இடைஞ்சலாக இருக்கிறது. இதை அனுபவித்துப் பார்ப்பவர்களுக்குத் தான் தெரியும் இந்த கோயிலுக்குப் போறவர்கள் மட்டுமல்ல சாலையில் கூட்டமாக நடந்து செல்பவர்களுக்கும் தான். என்ன செய்வது அவர்களும் நடைபயனம் செய்ய வேண்டும் நாமும் போகவேண்டும் நாமே பொருத்துக் கொள்ள வேண்டியது தான் பக்த்தி தான் முக்கியம்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இங்கேயும்; வருடாவருடம்; சமயவேறு பாடின்றி;CHARTRES மாதாகோவிலுக்கு (800 வருடப் பழமைவாய்ந்த தேவாலயம்) ஆகஸ்ட் 15 ஒட்டி வரும் மாதாவின் திருநாளையொட்டி; நடையாக யாத்திரை செல்வர்.இது பாரிசிலிருந்து சுமார் 100கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கிறது.அன்னையில் அருள்!
யோகன் பாரிஸ்

Anonymous said...

நல்லதொரு அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டதைற்கு மிக நன்றி சித்தப்பா....
மகிழ்ச்சியாய் இருந்தாலும் கவலையாகவும் இருந்தது.ஏனெனில் 29 பேரை உபசரிக்க எங்கள் காண்டீனில் வசதி இல்லை.மேலும் நுழைவு வாயில் அருகே இருப்பது சிறிய சமையல் கூடம் மட்டுமே!!
உபசரிப்பில் என்ன இருக்கிறது .. உங்களின் நல்ல எண்ணமும் நல்ல மனதுமே போதுமனதாக இருக்கும்....

ambi said...

great to know! thamizhargal virunthombalukku peyar petravargal. once again it's prooved. :)

Geetha Sambasivam said...

Really a nice experience. You did a great job for them and also it seems to be a timely help. I do not know till now you are in Caddalore. Please do write often about all your experiences. I am sorry to give the comment in English.

மு.கார்த்திகேயன் said...

ரொம்பவும் நல்ல பதிவு.. இது போல எங்கள் ஊரில் இருந்தும் பாதயாத்திரை நடக்கும், நடேசன். அது வேளாங்கண்ணியையும், பழநியையும் நோக்கி போகும்.. கருணை எல்லப் பக்கமும் பொங்கி பிரவாகம் எடுக்கும்

தருமி said...

எங்கள் வீடு பழனி நடைப் பயணிகள் செல்லும் வழியில். எத்தனை வித மனிதர்கள். ம்ம்..ம்.. ஏதோ ஒரு ஈர்ப்பு; நம்பிக்கை.

வாழ்க்கையே நம்பிக்கைதானே!

Ashwinji said...

வணக்கம் திருவாளர் நடேசன்
தாங்கள் என் பதிவினைக்கண்ணுற்று வாழ்த்தியமை எனக்கு பெரும்பேறாய் அமைந்தது.
தங்கள் பணி சிறக்க தில்லை அம்பல வாணனின் திருவருள் துணை நிற்க வேண்டுகிறேன்.

அன்புடன்
அஷ்வின் ஜி
www.vedantavaibhavam.blogspot.com