Friday, March 21, 2014

வேயறு தோளிபங்கன் விடம் உண்ட கண்டன்   
  மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடி மேல் 
அணிந்தென் உளமே புகுந்த அதனால்
 ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பு இரண்டும் 
உடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு  மிகவே.    

                                 chant 11 times morning and evening. -- 

Saturday, March 08, 2014

நீ வீணாக அழுவதேன்? மரணமோ, நோயோ உன்கில்லை. நீ அழுவதேன்? 

துன்பமோ,   துரதிர்ஷ்டமோ உனக்கு கிடையாது. நீ ஏன் அழ வேண்டும்? 


மாற்றமோ உனக்கு விதிக்கப்படவில்லை. 


நீ ஆனந்தமயமானவன். 


நீ உனது ஆன்மாவில் நிலைத்திரு. 


மக்கள் என்ன வேண்டுமானாலும் எண்ணட்டும் என இரு. 


பிறகு, நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் காலடியில் பணிந்து கிடக்கும்.