Saturday, September 01, 2018

வேதாந்த தேசிகர்
--------------------------------
தூப்புல் வேதாந்த மஹாதேசிகன் :
===================================
செல்ல வேண்டிய   திசையை சரியாக காட்டுபவனே  தேசிகன்.

ஆசார்யன் என்பதும் இதை போலவே. 
சாரி  என்றால் சஞ்சரிப்பவன். 
பாத சாரி காலால் நடந்து செல்பவன்.  
கஜாச்சாரி   யானைமேல்  செல்பவன். 
எனவே  சரியான பாதையில் நடந்து சென்று மற்றவர்க்கு வழிகாட்டுபவன் ஆசார்யன்.
ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஒரு  தேசிகன் பெயருக்காக உயர்ந்தவர் என்றால்
அவரேநிகமாந்த தேசிகன் என்றும்  சுவாமி தேசிகன் என்றும் பெயர் கொண்ட தூப்புல் வேதாந்த மஹாதேசிகன்...
இவர் ஒரு மஹா ஆசார்யனாய் இருந்து வைணவசமயம் காத்த உத்தமர்.
ஒரு வெண்கல மணியை பெருமாள் தனக்கு கொடுத்து அதை தான் விழுங்கியதாக கனவு கண்டாள்  அவர் தாய்...
ராமானுஜரைப் போன்று  இவரால் கணீரென்று  வேத நாதம் எங்கும் ஒலிக்க  பிரகாசிப்பார் என்று  பெருமாளே  அருளினார்.  அதனால்  தான் பெருமாள் சந்நிதியில்  மணி கிடையாது. திருவாராதனம் போது வெளியே உள்ள மணி மட்டும்
இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வேங்கடநாதன் என்பதாம். ....
தன்னுடைய இருப்பத்தேழாம் வயதில் வைணவ குரு எனும் நிலையை அடைந்த இவர் தன்னுடைய குருவான கிடாம்பி அப்புள்ளாரின் ஆணைப்படி
கடலூருக்கு அருகில் உள்ள திருவஹீந்தரபுரம்  சென்று சில காலம் வாழ்ந்தார்.
திருப்பதி,மேல்கோட்டை,காஞ்சிபுரம்,அயோத்தியா,பிருந்தாவனம்,பத்ரிநாத்,
திருவரங்கம் உள்ளிட்ட எண்ணற்ற தலங்களுக்கு சென்று ஜெகத்குரு இராமனுசரின் தத்துவங்களை பரப்பினார். 
இறுதியில் தன் மகனான குமார வரத தேசிகனோடு திருவரங்கம் வந்தவர் இப்புவியில் 101 வருஷங்கள் வாழ்ந்தார்.
இராமனுசரின் தத்துவங்களை பரப்புவதையே முழுப்பணியாக கருதியவர் சுமார் நூற்றிருப்பத்து நான்கு நூல்களை தமிழ், வடமொழி, பிராகிருதம், மணிப்பிரவாள நடையில் அருளியுள்ளார்.

மாமன் அப்புள்ளார்  ஐந்து வயதில் அவரை  நடாதூர்  அம்மாள் பிரசங்கத்திற்கு அழைத்து சென்றபோது அவர் ஒரு கணம் சிறுவனைப் பார்த்து பிரமித்து
”எங்கே பிரசங்கத்தை நிறுத்தினோம்”  என்பதை  மறந்து போனார்.
மீண்டு யோசிக்கையில்,  சரியாக  அந்த ஸ்லோகத்தை எடுத்து சொன்னார் தேசிகர்.

20  வயதில் சகல சாஸ்திரங்களும் அறிந்தார். அப்புள்ளாரிடம் கருட மந்திர உபதேசம் பெற்றார்.

திருவஹீந்த்ரபுரம் என்ற பெயர்  இப்போது சுருங்கி  திருவந்திபுரம்  ஆகிவிட்டாலும்  தேசிகரின் சரித்திரம் கொஞ்சமும்  சுருங்கவில்லை.
இங்கு தான் ஒரு  சிறு குன்றில் பலநாள் அன்ன ஆகாரமின்றி
கருட மந்த்ரம் ஜபித்தார்.
ஶ்ரீ ஹயக்ரீவ மந்திரம் ஜபிக்வே எம்பெருமானும்
திவ்ய தரிசனம் தந்துஅவருக்கு  ஹயக்ரீவ மந்திராபதேசம் செய்து
ஶ்ரீ தேசிகன் விருப்பப்படி அவரது நாவில் குடிகொண்டார்.
தனது சிலா ரூபத்தையும் கொடுத்தார்.
அந்த ஹயக்ரீவ  விக்ரஹத்தை இன்றும்  தேவநாத பெருமாள்  சந்நிதியில்  காணலாம்......
திருப்பதி சென்று  தயா சதகம் இயற்றினார்.  பெருமாளால் வேதாந்தாச்சார்யா என்று கௌரவிக்கப் பட்டவர். 
ஸ்ரீ ரங்கம் போகும் வழியில் ஸ்ரீ பெரும்புதூர்  சென்று ஸ்ரீ ராமானுஜரை வழிபட அங்கே யதிராஜ சப்ததி  என்ற ஸ்லோகம் உருவானது.
ஸ்ரீ ரங்கத்தில்  ரங்கநாதர் மகிழ்ந்து அளித்த பெயர் தான்  வேதாந்த தேசிகர்  என்று நாம் இன்றும் அவரை அறிவது.. 
ரங்கநாயகி தாயார் அளித்த பெருமை தான் சர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர்.
1327ல் அலாவுதினின் தளபதி மாலிக் காப்பூர் தெற்கே  பல ஆலயங்களை அழித்தபோது  ஸ்ரீரங்க பெருமாள் திருப்பதிக்கு எடுத்து செல்லப்பட்டும்  ஸ்ரீ பாஷ்ய க்ரந்தங்கள் கர்நாடகத்துக்கும்  எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த பொறுப்பை தேசிகன் ஏற்றார். ஒரு இரவு  செத்த பிணங்களோடு பிணமாக கிடந்து மிலேச்சர்களிடம் இருந்து  அரிய  வைஷ்ணவ செல்வங்களை காப்பாற்றியவர் ஶ்ரீ மஹா தேசிகன் 
ஸ்ரீ வில்லிப்புத்தூரில்  ஆண்டாளை வழிபாட்டு  கோதா ஸ்துதி உருவானது. ஆண்டாள் உத்சவத்தின் போது  திவ்ய பிரபந்தத்துடன் ஆண்டாளின் விருப்பப் படியே,கோதாஸ்துதி ஸ்லோகங்கள் சொல்லப்பட்டு வருகிறதே.!!!

காசு, தங்கம், நாணயம் இதெல்லாம்  தேசிகர் பார்த்ததில்லை, வாங்கிக்கொள்ள மாட்டார். எனவே  உஞ்சவ்ரித்தியில் வாழ்ந்த அவருக்கு அரிசியோடு தங்கமணிகளை கலந்து கொடுத்து, அதை அவர் மனைவியிடம் கொடுத்து சமைக்க சொல்ல, அவளோ இதெல்லாம்  என்ன அரிசியோடு என்று கேட்க,      ஏதாவது பூச்சி முட்டையாக இருக்கும்  என்று  கையால்  கூட  தங்கத்தை தொடாமல்   தர்ப்பையால் அவற்றை ஓதுக்கி வெளியே  எறிந்து விட்டார்.

தேசிகரின் பால்ய  நண்பன் வித்யாரண்யன்  
விஜயநகர சாம்ராஜ்யத்தில் பெரிய பதவியில் இருந்ததால்,

”தேசிகா,  நீ  எதற்காக  ஏழ்மையில் வாடுகிறாய்,
வா என்னிடம், இங்கு  உனக்கு நிறைய  பரிசு வழங்க  ஏற்பாடு செய்கிறேன் என்றான் ”  வித்யாரண்யனுக்கு   அவர்  பதிலாக  எழுதியதே  நமக்கு பொக்கிஷமாக கிடைத்த ”வைராக்ய பஞ்சகம்”.”வித்யாரண்யர்
நமக்கல்லவோ மிகப்பெரிய பரிசை அளித்துவிட்டார்.”.
ஆதி சங்கரர்  ஒரு  ஏழைப் பெண்ணுக்கு  பொன் மழை பெய்ய வைத்த  கனக தாரா ஸ்தோத்ரம் தெரியுமல்லவா. அதே போல் இன்னொன்றும் காஞ்சியில்  நடந்திருக்கிறதே.
காஞ்சிபுரத்தில் தேசிகர் வாழ்ந்தபோது, அவரை அவமானப் படுத்த சில விஷமிகள்,
ஒரு ஏழைப்பையன் தனது  திருமணத்துக்கு உதவி கேட்டபோது ”தம்பி நீ  தேசிகர் என்று ஒருவர்  ரெண்டு தெரு தள்ளி  வசிக்கிறார். பணக்காரர்.
யார் கேட்டாலும் பணம்  தருவாரே, அவரைப் போய்  கேள்” என்று அனுப்ப, 
அந்த அப்பாவி அவரது எளிய வாழ்க்கை நெறி தெரியாமல் அவரை நிதி உதவி கேட்க, அவனை அழைத்துக்கொண்டு நேராக  வரதராஜ பெருமாள் கோவில் சென்று  தாயாரின் சந்நிதியில் அவளை உதவி செய்  என  வேண்டினார் தேசிகர்.
”அவரது  மனதைத் தொடும்
”ஸ்ரீ ஸ்துதி”  தாயாரை  உடனே அங்கே ஒரு  பொன்மழை பெய்ய வைக்க  காரணமானது.. 
ஒரு  பாம்பாட்டி தேசிகரிடம்  ”என்னுடைய விஷ  பாம்புகளை  உங்களால் சமாளிக்க முடியுமா?”  என்று சவால் விட,   
அவர் தரையில் ஒரு கோடு  போட்டு 
” உன் பாம்புகள் இந்த  கோட்டைத்  தாண்டட்டும்” என்றார். 
சில விஷ  பாம்புகள்  கோட்டைத் தாண்ட முயன்றபோது  தேசிகர் உச்சரித்த  கருட மந்திர  ஸ்லோகம் கேட்ட  கருடன் வந்து அத்தனை பாம்புகளையும் அன்றைய காலை  உணவாகத்  தூக்கிக் கொண்டு போய் விட்டான். 
பாம்பாட்டி அவர் காலில் விழுந்து ”என் பிழைப்பே இந்த பாம்புகள் தான் ” தயவு செய்து அவற்றை திரும்ப தரவேண்டும் என்று கெஞ்சினதால்,  மீண்டும் கருட மந்த்ரம் சொல்லி கருடனை அந்த பாம்புகளை திரும்ப தர வைத்தார் .
”உங்களால் எல்லாமே  செய்ய முடியும் என்கிறார்களே, என்னைப்போல் கட்ட முடியாவிட்டாலும்  ஒரு  சாதாரண கிணறு கட்ட முடியுமா  உங்களால்?”  என்று  ஏளனமாக கேட்டானாம் ஒரு மேஸ்திரி.
”சரியப்பா கட்டுகிறேன்”
 நான் கொடுக்கும் கற்களை மட்டுமே  கொண்டு அதைக் கட்டவேண்டும்”
”ஆஹா  அப்படியே.’ என்ற தேசிகர்  அவன் கொடுத்த  அளவு சரியில்லாத கோணா  மாணா  கற்களைக் கொண்டே  கட்டிய  அந்த வினோத கிணறு இன்றும் திருவஹிந்திர புரத்தில் இருக்கிறது.
எங்கே நீர் வற்றினாலும் அந்த கிணற்றில் நீர் வற்றுவதில்லை. சுவையிலும் குன்றவில்லை.


தனது உருவத்தை தானே  தேசிகர்  வடித்த சிலாரூபம் இன்றும் தேவநாதர் ஆலயத்தில் இருக்கிறதே.      
மேலே சொன்ன அவர்
கட்டிய கிணறையும் பார்க்க தவறவேண்டாம்.  கோவிலுக்கு அருகாமையில் சற்று தள்ளி 
ஒரு மண்டபத்தில் உள்ளது.

நமது தூப்புல் குலமணியும் ஸாக்ஷாத் திருமலைமால் கண்டாவதாரமும் ராமானுஜ 
தேசிகர்  101 வருஷம்  வாழ்ந்தார்.  தனது அந்திம நேரம் நெருங்கியதை உணர்ந்த தேசிகர்  தனது குமாரர்  குமார வரதாசாரியாரை அழைத்து அவர் மடியில் தலை வைத்து, அவரை ”திருவாய் மொழி,  உபநிஷத்  எல்லாம் சொல்லப்பா. கேட்டுக்கொண்டே செல்கிறேன்”  என்றார்.  பரமபதம் அடைந்தார்.  தாயார்  ரங்கநாயகி  தன்னருகே ஒரு சந்நிதியில்  தேசிகரை  இருத்திக் கொண்டாள்.
வேறு யாருக்கும் இங்கு இடமில்லை என்ற அவள் ஆணை இன்றும்  நிலுவையில் இருக்கிறது.

”ராமானுஜ  தயா பாத்ரம், ஞான வைராக்ய பூஷணம்,


No comments: