ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே!!!
ஒரு புரட்டாசி சனியன்று புகழ் பெற்ற திருவஹீந்திபுரம் பெருமாள் ஆலயத்திற்கு சென்று இருந்தேன். அங்கு ராமக்ரிஷ்ண ஹரி என்ற சென்னையைச் சேர்ந்த இளைஞர் தன் குழுவினருடன் கலியுகத்தில் எவ்வாறு வாழ்க்கையை நடத்த வேண்டும் மற்றும் பாவம் தீர வழி ஆகியவைக் குறித்தும் விளக்கி ஒரு சிறியக் கூட்டுப் பிரார்த்தனை ஒன்றையும் அற்புதமாக நடத்தினார்.. நான் அவரிடம் அதற்கு அடுத்த சனிக்கிழமை எங்கள் நகரில் உள்ள கும்பாபிஷேகம் முடிந்து மண்டாலபிஷேகம் நடந்து வரும் கற்பக விநாயக ஆலயத்திற்கு அழைதேன். அவரும் மறக்காமல் சிஷ்யர்கள் முரளீ மற்றும் கிருஷ்ண் மூர்த்தி தாஸ் ஆகிய இருவரையும் அனுப்பி எங்கள் மண்டல பூசையை சிறப்பிக்கச் செய்தார்.. ராம நாமமும் ,திவ்ய நாமமும் எல்லோர் மனதிலும் ஒலித்தது!
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே!
தியாகி வள்ளியம்மை தில்லையாடியிலே பிறந்து தென் ஆப்பிரிக்காவில் உயிர் நீத்தவர்.காந்தியடிகள் உடன் தென் ஆப்பிரிக்காவில் போராட்டங்கள் பல செய்தவ்ர்.இவரது தியாகம் பலரால் மறக்கப் பட்டுவிட்டது. காந்தியடிகள் இந்தியா திரும்பியதும் வள்ளியம்மாவின் நினைவுடன் தில்லையாடி வந்திருந்தார்.இதன் நினைவுச் சின்னங்கள் தில்லையாடியில் உள்ளது. வளரும்!!!
ப்ரகன் நாயகி சமேத சரணாகத ரட்சகர் திருக்கோவில் ,தில்லையாடி என்ற ஊரில் அமைந்துள்ளது.இத்தலம் திருக்கடவூருக்கு அருகில் அமைந்துள்ளது.சோழ மன்னரால் திருக்கடவூரில் ஸ்தலம் நிர்மாணிக்கப் பட்டபோது,அவரது மந்திரியானவர் தில்லையாடியுலும் ஒருக் கோயில் ஒன்றைக் கட்டி மன்னரின் கோபத்திற்கும் சிவபெருமானின் அருளுக்கும் பாத்திரமானது மிக்க சிறப்பான நிகழ்வாகும். +
அது மட்டுமல்லாது இந்திய சுதந்திரபோராட்ட தியாகிகள் வரிசையில் தில்லையாடியில் பிறந்த தியாகி வள்ளியம்மையின் தியாகம் எழுத்தில் எழுத அடங்காது..
இனி இதை எனக்குத் தெரிந்த அளவில் சொல்ல முயற்சிக்கிறேன்....
திருக்கோவில் தல விருட்சங்களில் மிகவும் அபூர்வமான ஒன்று குரா மரமாகும்.தமிழ்நாட்டில் முருகப் பெருமானுக்கென்று உள்ளத் திருத்தலங்களில் குரா மரத்தினைக் தன்னகத்தே தலவிருட்சமாகக் கொண்ட திருவிடைகழி மிக பிரசித்திப் பெற்ற திருத்தலமாகும்.இக்குரா மரத்தினடியில் முருகப் பெருமான் விரும்பி காலாற நடந்து ,உலா வந்து மற்றும் சிவப் பெருமானை பூஜித்து வரம் பெற்றார்.
அருணகிரி நாதரும் கந்தனைப் பாடி போற்றி அஷ்டமாசித்திகள் அடைந்த அற்புதமானத் திருத்தலம்..
அதிசயம் பல நிறைந்த குரா மரத்தின் பூக்களை அனைத்து மதத்தினரும்,மற்றும் அனைத்து தெய்வங்களுக்கும் அணிவித்து மகிழ்வர்.இம்மலரைப் போற்றாத சமய இலக்கியமே இல்லை எனலாம்.
இம்மரத்தை தல விருட்சமாகக் கொண்ட ஒரேத் திருத் தலம் திருவிடைக்கழி ஆகும்.இம்மலரில் முருகனது திருப்பாதம் ஒளிந்து உள்ளது என்று திருப்புகழில் அருணகிரி நாதர் போற்றி உள்ளார்.
வெளிப் பிராகாரத்தை வலம் வரும்போது வடக்கே குரா மரம் பிரம்மாண்டமாகக் காட்சி தருகிறது..மலைப் பிரதேசத்தில் மட்டுமே காணப்படும் இம்மரம் வயல் சூழ்ந்த மருத நிலத்தில் காணப்படுவது அரிதான ஒன்று..இங்கே யோக சுப்பிரமணியர் என்றத் திருநாமத்துடன் முருகர் சிவப் பெருமானை பூஜித்தார்.
இங்கே இதனருகேயே மகிழ மரம் ஒன்று இருக்கிறது.இது இத்தலத்தில் உள்ள பாபநாச பெருமானுக்குறிய தலவிருட்சமாகும்.
ஆம் இரண்டு தல விருட்சம் ,கருவறையில் இரண்டு பெருமான்,இரண்டு கோபுரம்,இரண்டு சண்டிகேஸ்வரர் என்று இரண்டிரண்டாக காணப்படுவது மிக்கச் சிறப்பு வாய்ந்ததாகும்.
திருமணத்தடை நீக்கி திருமணம் கைகூட நிகழ்த்தபடும் வழிபாடுகள் மூலம் விரைவில் திருமணம் நடைபெறுகிறது என்பது சத்தியம்....
இத்திருத்தலம் மயிலாடுதுறை அருகே திருக்கடவூர் கோவில் மற்றும் தில்லையாடித் திருத்தலத்தின் அருகே உள்ளது..
வாய்ப்பு கிடைப்பவர்கள் சென்று வாருங்கள்.
இல்லையேல் முருகப் பெருமானையும்,குரா மரத்தினையும் நினைத்து பிரார்த்தணை செய்யுங்கள்.. முருகன் அருள் கிட்டுவது திண்ணம்,,,,