Friday, December 30, 2005

ஹனுமத் ஜெயந்தி


இன்று ஹனுமத் ஜெயந்தி ஒரு சிறப்பு மிக்க பண்டிகை.அவதாரப் புருஷன் அனுமார் வாயுவிற்கு மகனாகப் பிறந்தார்.இளம் வயதிலேயே திருமாலுக்கு சேவை செய்வதற்காக பிறந்தவன் நீ என்று கூறி வளக்கப்பட்டவர்.அவர் எப்படி நான் திருமாலை அடையாளம் கொள்வது என்றுக் கேட்டபோது யாரைப் பார்த்தால் உனக்கு அன்பும் பாசமும் பெருகிறதோ அவரே திருமால் என்று கூறப்பட்டது.அவர் ராமனை க் காட்டில்தான் முதல் முதலில் பார்த்தார்.மிகுந்த பரவசம் அடைந்தார்.பிறகுராமனுடைய தூதுவனாக மாறினார் என்பது நாம் அறிந்ததே.

நாம் அறியாதது ராமன் தனது அவதாரம் முடிந்து வைகுண்டம் செல்லப் போகிறார். அவர் அனுமனையும் தன்னுடன் அழைக்கிறார்.அதற்கு அனுமன் அங்கு ராம் நாமம் உண்டா என்றுக் கேட்டபோது ராமர்இல்லை எனச் சொல்ல "ராம நாமம் இல்லாத இடத்திற்கு தான் வரவில்லை என்று கூறி பூமியிலேயே தங்கிவிடுவதாக " கூறி இன்றும் ந ம்மிடையே வாழ்ந்து வருவதாக நம்பிக்கை.. இந்த நல்ல தினத்தில் பயத்தை ஒழித்து வாழ்வாங்கு வாழ்வோம்!

இவ்வேளையில் சுமார் இரு நூறு ஆண்டுகளாக அருள் புரியும் கடலூர் ஆஞ்சநேய பகவானை தரிசியுங்கள்!

5 comments:

குமரன் (Kumaran) said...

பதிவுக்கும் நினைவூட்டியமைக்கும் மிக்க நன்றி.

ஐந்திலே ஒன்று பெற்றான் ஐந்திலே ஒன்றைத் தாவி
ஐந்திலே ஒன்றாறாக ஆரியர்க்காக ஏகி
ஐந்திலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டயலார் ஊரில்
ஐந்திலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்.

Boston Bala said...

The picture looks familiar... Do U know where it was taken? thx!

Anonymous said...

ராமனைவிட ராமநாமம்தான் சிறந்தது என்று உலகுக்கு உணர்த்தியவர். அன்பன் தி. ரா. ச

தி. ரா. ச.(T.R.C.) said...

ராமனைவிட ராமநாமம்தான் சிறந்தது என்று உலகுக்கு உணர்த்தியவர். அன்பன் தி. ரா. ச

தி. ரா. ச.(T.R.C.) said...

ராமனைவிட ராமநாமம்தான் சிறந்தது என்று உலகுக்கு உணர்த்தியவர். அன்பன் தி. ரா. ச