Sunday, May 11, 2014

MOTHER' s GRACE -அன்னையின் கருணை.: star anusham temple : Mahalakshmiswarar

MOTHER' s GRACE -அன்னையின் கருணை.: star anusham temple : Mahalakshmiswarar

star anusham temple : Mahalakshmiswarar

today i visited THIRININDRIYUR anusham star temple.i got down at vaitheeswaaran koil temple and

purchased archana things.i took an auto and paid rs 150.00.i write in
details.                                                              



http://mahaperiyavaa.wordpress.com/2013/04/03/27-temples-for-27-stars

The temple is noted for Anusham-Anuradha star worship

any help is requiredplease feel free to contact me or mail me.
we have to take up some cleaning work at the temple .
சிவ சிவ
274.தேவாரம் பாடல் பெற்ற சிவ ஆலயங்கள்;
19.அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில்
ஊர்;திருநின்றியூர்
மாவட்டம்;நாகப்பட்டினம்
மூலவர்;மகாலட்சுமிபுரீஸ்வரர்
அம்பாள்;உலகநாயகி
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
பாடல்;
பறையின் ஓசையும் பாடலின் ஓசையும் மறையின் ஓசையும் மல்கி அயலெலாம் நிறையும் பூம்பொழில் சூழ்திரு நின்றியூர் உறையும் ஈசனை உள்குமென் உள்ளமே.
தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 19 வது தேவாரத்தலம் ஆகும்.ஸ்ரீ லக்ஷ்மிபுரீஸ்வரர் ஆலயம் அனுஷ நட்சத்திர  ...ஸ்தலமாகும்.அதை முன்னிட்டு பிரதி மாதம் அனுஷ நட்சத்திரம் அன்று சிறப்பு அபிஷேகமும் சந்தன காப்பு அலங்காரமும்,மஹா தீபாரதனையும் நடை பெறுகிறது.


sri lakshmipureeswarar temple is meant for anusha star's worshipping temple.hence everymonth during anusha star day spl abishekam ,sandal decoration and maha deepa aradahana  will be perfromed. 







Friday, March 21, 2014

வேயறு தோளிபங்கன் விடம் உண்ட கண்டன்   
  மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடி மேல் 
அணிந்தென் உளமே புகுந்த அதனால்
 ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பு இரண்டும் 
உடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு  மிகவே.    

                                 chant 11 times morning and evening. -- 

Saturday, March 08, 2014

நீ வீணாக அழுவதேன்? மரணமோ, நோயோ உன்கில்லை. நீ அழுவதேன்? 

துன்பமோ,   துரதிர்ஷ்டமோ உனக்கு கிடையாது. நீ ஏன் அழ வேண்டும்? 


மாற்றமோ உனக்கு விதிக்கப்படவில்லை. 


நீ ஆனந்தமயமானவன். 


நீ உனது ஆன்மாவில் நிலைத்திரு. 


மக்கள் என்ன வேண்டுமானாலும் எண்ணட்டும் என இரு. 


பிறகு, நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் காலடியில் பணிந்து கிடக்கும்.

Monday, February 24, 2014

The death centenary of Thillayadi Valliammai, the revolutionary, famed to have inspired Mahatma Gandhi in his fight against colonial rule, was observed here at Thillayadi in Tharangambadi on Saturday.

Born to Mangalam and Muthusamy Mudaliar, Valliammai was initiated into political struggle by Gandhi, when the colonial State of South Africa declared null and void all marriages forged outside of the South African law or Church law. Thousands of marriages were annulled. Valliammai marched with her mother from Transvaal to Natal protesting against the unjust laws.

Valliammai also participated with her mother in protests against exorbitant taxes levied against workers. They were arrested and sentenced to three months of hard labour.
It is recorded that when Gandhi visited a fragile and ill Valliammai shortly after her release, the young girl vowed to be arrested any number of times to carry on the fight for people’s rights. Gandhi quoting the girl cited her as someone who inspired him to stay the course in the fight for equality in South Africa.
But the girl’s physical health did not match her mental strength. Shortly after her release, Valliammai, all of 16 years, died on February 22, 1914.
For Prega Moonsamy and his family, Saturday was their first date with Thillayadi, the ancestral home of Valliammai. Valliammai was the grand aunt of Prega Moonsamy.
“Thillady Valliamai was my grandfather’s sister,” he says.
Prega Moonsamy, along with his wife Radhie, and two daughters Prenita, and Sarisha, arrived here on Thursday to mark the celebrations.

As the bust of Valliammai here drew crowds, a function to mark her sacrifice was being held in Johannesburg, said Mr.Moonsamy.

At Thillayadi, a sense of pride gripped the air.
It was evident, when the celebrations were led by Gajan Mudaliar, a South African settled in Australia. Mr.Mudaliar arrived here with his wife Krishnaveni.

A Dharmapuri-based retired BDO Balasundaram took the initiative to organise the events jointly with the local panchayat.


Gandhi gave her credit for staying the course in fight for equality in South Africa
http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/girl-who-inspired-mahatma-remembered/article5718171.ece

Thursday, September 05, 2013

நான் அமரன்.


நான் அமரன். எனக்குச் சாவு கிடையாது. நாழிகைகள் கழிக; நாட்கள் ஒழிக; பருவங்கள் மாறுக; ஆண்டுகள் செல்க; நான் மாறுபடமாட்டேன். நான் எக்காலமும் உறுதியாகவும் ஸ்திரமாகவும் இருப்பேன். என்றும் உயிர் வாழ்வேன். எப்போதும் ஸத்யமாவேன். எப்போதும் களித்திருப்பேன். இதையெல்லாம் நான் உறுதியாகத் தெரிந்து கொண்டேன். இஃதெல்லாம் <உண்மையென்று அறிவேன். நான் கடவுள்; ஆதலால் சாக மாட்டேன். தெய்வம் என்னுள் எப்போதும் வந்து பொழிந்து கொண்டிருக்கும்படி என்னைத் திறந்து வைத்திருக்கிறேன். அதாவது, நான் என்னுள் வீழும்படி எப்போதும் திறந்து நிற்கிறேன். என்னுள்ளே கடவுள் நிரம்பியிருக்கிறான். அதாவது, என்னுள் யான் நிரம்பிக் கிடக்கிறேன். என் நாடிகளில் அமிர்தம் ததும்பிப் பாய்கிறது. அதனால் என் ரத்தம் வேகமும் தூய்மையும் உடையதாய் இருக்கிறது. அதனால் என்னுள்ளே வீர்யம் பொங்கிக் கொண்டிருக்கிறது.

நான் எப்போதும் வீர்யம் உடையேன்; ஜாக்ரதையுடையேன்; எப்போதும் தொழில் செய்வேன்; எப்போதும் காதல் செய்வேன்; அதனால் சாதல் இல்லேன். நான் இத்தனை ஆனந்தத்துள் மூழ்கிக் கிடக்குமாறென்னே? நான் தேவனாதலால்! நான் தீராத இளமை சார்ந்தேன். என்றும், எப்போதும், நித்யமான கால முழுமையிலும்; தீராத, மாறாத இளமையுடையோன். மூட மனிதர் தீர்க்காயுள் வேண்டுகின்றனர். நான் அதனை வேண்டேன். ஏனென்றால், இவர்களெய்தும் நீண்ட வயது துன்பமாகிறதேயன்றி வேறில்லை. நான் சதாகாலம் துன்பமின்றி வாழும் வாழ்க்கையை விரும்புகின்றேன். அதனை நான் எய்தி விட்டேன்.

தீராத கவலை பொதிந்த சாதாரண மனித வாழ்க்கை சற்று நீடிப்பினால் என்ன பயன் தரும்? நான் கவலையை ஒழித்தேன். ஆதலால் எப்போதும் வாழ்வேன். ஆதலால் கவலையை விட்டேன். கவலையாலும் பயத்தாலும் மரணமுண்டாகிறது. கவலையும் பயமும் பகைவர். நான் இப்பகைவரை வென்று தீர்த்தேன். ஆதலால் மரணத்தை வென்றேன். நான் அமரன்.

Saturday, August 17, 2013

osho

Just allow life to take you wheresoever it leads you and don’t be afraid. Fear is the only thing one should be afraid of, nothing else. Move! Be courageous and daring. - Osho




Thursday, July 11, 2013

improve your brain

மூளையைத் தூங்க விடாதீர்கள்!

பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

1. கவனமான பார்வை
2. ஆர்வம், அக்கறை
3. புதிதாகச் சிந்தித்தல்

இந்த மூன்றிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. அந்தப் பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ளலாம். அதற்கான சில பயிற்சி முறைகளைப் பார்ப்போம். முதலாவதாக ஒரு பயிற்சி.

ஒன்றிலிருந்து நூறு வரை எண்ணுங்கள். பிறகு 2,4,6 என்று இரண்டு இரண்டாக எண்ணுங்கள். பிறகு 100 லிருந்து தலைகீழாக, 100, 98 96, என்று இரண்டு இரண்டாகக் குறைத்து எண்ணுங்கள். பிறகு நான்கு நான்காகக் குறையுங்கள். இப்படியே 5,6,7 வரை தாவித் தாவி குறைத்து எண்ணுங்கள். இப்படி ஏழு ஏழாக குறைத்து எண்ணக் கற்றுக் கொண்டீர்கள் என்றால், உங்களுடைய நினைவுத் திறன் நல்ல அளவில் வளர்ந்திருக்கிறது என்று அர்த்தம்.

இப்போது ஓர் ஆங்கிலப் பத்தரிகையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பத்தியில் எஸ். எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். அடுத்து இரண்டு மூன்று பத்திகளில் உள்ள ஏ எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். இப்போது மீண்டும் ஒரு முறை திருப்பிப் பார்த்தீர்கள் என்றால், எத்தனை எஸ் அல்லது ஏவை எண்ணாமல் விட்டிருப்பீர்கள் என்று தெரியவரும். அதை வைத்து உங்கள் நினைவுத் திறனின் அளவை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
புதிய சிந்தனை மூலமும் நினைவுத் திறனை வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம்.

தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பாரங்கள். அந்த விளம்பரம் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணுங்கள். வேறு எந்த மாதிரி இந்த விளம்பரம் இருந்திருந்தால், இதைவிட நன்றாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். சிந்திக்க சிந்திக்க மூளையின் சிந்திக்கும் ஆற்றல் வளர்வதோடு நினைவாற்றலும் பெருகும். முயன்று பாருங்கள்.

இதே போன்று இன்னொரு பயிற்சி. உங்கள் நெற்றியை கற்பனையாக நீங்களே 6 அறைகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு அறையை இழுங்கள். அதில் மறுநாள் 9 மணி புரோகிராம் என்று எழுதிப் போடுங்கள். (உதாரணமாக 9 மணிக்க ராம்கோபாலை சந்திக்க வேண்டும் என்று கற்பனையாக எழுதிப் போடுங்கள்). பிறகு அந்த அறையை இழுத்து மூடுங்கள்.

இதே போன்று இரண்டாவது அறையைத் திறந்து இன்னொரு புரோகிராம் எழுதிப் போடுங்கள். அதே போன்று அடுத்தடுத்த நான்கு அறைகளும், இப்படிச் செய்து விட்டால் இரவு படுக்கையில் படுத்ததும் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். இந்த 6 புரோகிராம்களும் அடுத்தடுத்து உங்களை அறியாமலே உங்கள் மனதில் தோன்றும். இன்னும் இதே போன்று நீங்கள் கூட புதிய புதிய முறைகளைக் கையாண்டு உங்கள் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.

புத்தகங்களைப் படிப்பது, காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருந்து அன்றைய நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது, அபிப்யாசங்கள் செய்வது இதனாலெல்லாம் கூட உங்கள் சிந்திக்கும் திறனையும், நினைவுத்திறனையும் வளர்த்துக் கொண்டே போகலாம்.

உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஓர் இயந்திரம். அதிலும் இதயமும், மூளையும், ஓய்வில்லாத இயந்திரங்கள். இதயம் ஓய்வு எடுத்துக் கொண்டால் வாழ்க்கை நின்று விடும். மூளைக்கு ஓய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயனற்று வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய்விடும்.

ஆகையால் எந்த நேரமும் மூளைக்கு ஏதேனும் வேலை கொடுத்துக்கொண்டே இருங்கள். நினைவாற்றலை மேம்படுத்துங்கள். நினைத்ததைச் சாதியுங்கள்.

Thursday, July 04, 2013

success.

One day you will succeed
One day you'll have the success you want
Yes you will succeed...

It's true, you will...


Sunday, May 12, 2013

MOTHER' s GRACE -அன்னையின் கருணை.: thillaiyadi

MOTHER' s GRACE -அன்னையின் கருணை.: thillaiyadi

thillaiyadi

தில்லையாளி என்கிற தில்லையாடி. இவ்வூர் தொன்றுதொட்டு சரித்திரத்தில் பெயர்பெற்று வருகின்றது. 1914-ல் காந்தியடிகள் தில்லையாடிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஊரில் ஸ்ரீ சார்ந்தாரைக் காத்த சுவாமி ஆலயம் உள்ளது.
சோழ மன்னன் இளங்கார முனிவர் என்ற அமைச்சரை திருக்கடவூருக்கு அனுப்பி அங்கு தங்கி ஆலயத்தை புதுப்பிக்கும்படி திருப்பணிக்கு உத்தரவிட்டு பொருட்களையும் வழங்கி வந்தான். மன்னனின் அனுமதி பெறாமல் திருக்கடவூருக்கு அருகில் உள்ள தில்லையாடி ஆலயத்தையும் ஒரே சமயம் திருப்பணி செய்துவிட்டான். இதை அறிந்த மன்னன் தன் கருத்துணராது செயல்பட்ட அமைச்சரின் கால், கைகளை சேதம் செய்க என ஆணையிட்டான். ஏவலர்களும் அவ்வண்ணமே செய்தனர். சிவபெருமான் முன்தோன்றி அசரீரியாக அமைச்சர் செய்த சிவாலய பணியை ஏற்றோம் என்றது கேட்ட அரசன் திடுக்கிட்டான். துன் குற்றத்தினையுணர்ந்து அமைச்சரிடம் அடிபணிந்தான். வெட்டுண்ட அமைச்சரின் கை கால்கள் ஒன்று கூடின. இளங்கார முனிவர் என்ற அமைச்சரை இவ்வாலயத்தில் தங்க வைத்து விட்டு அவருக்கு வேண்டிய அனைத்தும் செய்து கொடுத்துவிட்டு அரசன் சென்றுவிட்டான். சிவனருள் நிரம்பப் பெற்றவரான இளங்கார முனிவர் சிதம்பரம் பொற்சபையில் ஸ்ரீ நடராஜர் திருநடனம் செய்வதை இத்தலத்திலும் காண எண்ணங்கொண்டார். சிற்சபா நாதனும் வேண்டுவார் வேண்டுவதே ஈவான்கண்டாய் என்ற திருவாக்கின்படி இளங்கரை முனிவர் விரும்பிய வண்ணம் தில்லைவனத்தில் ஸ்ரீ நடராஜர் நடனமாடினார். ஆன்று முதல் இத்தலம் தில்லையாடி என வழங்கலாயிற்று. அன்று முதல் இறைவனுக்கு ஸ்ரீ சார்ந்தாரைக் காத்த நாதர் என்ற பெயர் வழங்கலாயிற்று.
இவ்வாலயம் திருக்கடையூர் ஆலயம் போன்ற அமைப்புள்ளதாயினும் 3 ஏக்கர் பரப்பளவில் உள்ள இக்கோவில் , , மற்றும் ஊர் வாழ்மக்கள் முயற்சியாலும், தருமபுர ஆதீனகர்த்தர் நல்லாசியுடனும், காஞசி காமகோடி ஜகத்குரு ஜெயேந்திர மற்றும் விஜயேந்திர சுவாமிகளின் பரிபூரண ஸ்ரீமுகம் பெற்று 1995 செப்டம்பரில் பாலாலயம் செய்யப்பட்டு 2 ஆண்டுகளில் சுமார் 10 லட்ச ரூபாய் திருப்பணி வேலை முடிவுற்று அருள்மிகு பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சார்ந்தாரைக் காத்த சுவாமி (சரணாகத ரட்சகர்) ஆலயம் புத்தம்புதுப் பொலிவுடன் குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற்றது..