Sunday, August 27, 2006

வேளாங்கன்னி அன்னைக்காக நடைபயணம்.

ஒரு மனிதன் ஒரு நாளைக்கு எத்தனை தூரம் நடக்கமுடியும்..காலையில் நடை பயிற்சி மேற்கொள்பவர்கள் சொல்லாட்டும்.6 கிமீ முதல் 10 கிமீ வரை இருக்குமா.அதுவும் பாதி பேர் வாக்கிங்க் போவதாக பாவலா செய்துவிட்டு தம் போட்டுவிட்டு களைப்பாக வீடு திரும்புவர் ,என்னைப் போல்!!
தம்மைத் தவிர்த்து.!

ஆனால் புனித அன்னைக்காக சென்னை மற்றும் இதர இடங்களில் இருந்து காவி உடையுடன் சிறுவர்,சிறுமி,வாலிப ,வயோதிக ஆண் ,பெண் அனைவரும் சாரி சாரியாக செல்லும் காட்சி மிகுந்த வியப்பை அளிக்கும்.பணக்கார ஏழை என்ற பாகு பாடில்லாமல் கிடைத்த இடத்தில் ஓய்வு எடுத்து,உண்டு ,உறங்கி ஆஹா என்னவொரு காட்சி!!

எங்கள் நிறுவனம் சென்னை வேளாங்கன்னி சாலயில் அமைந்திருப்பதால் தினமும் அவர்கள் வேகமாய் நடந்து செல்லும் காட்சி என்னை மிகவும் ஈர்க்கும்!

பல வருடங்களாக நடக்கும் நிகழ்ச்சிதான் என்றாலும் இவ்வருடம் சற்று அதிகம் என் கவனத்தை ஈர்த்தது!!அது என் நண்பர் திரு தாமஸ் மூலம்!!இவ்வருடம் அவரையும் அவரது குழுவினரையும் எங்கள் வாயிலில் வரவேற்கவும் சிறிது உபசரிக்கவும் முடிவு செய்தேன்.
அதாவது 28 ஆகஸ்ட் வேளாங்கன்னி கோயிலில் கொடியேற்றம் மற்றும் 10 நாள் திருவிழா.அநேகமாக கொடியேற்றத்தில் அனைவரும் பங்கு பெறுகின்றனர்!!

போன வியாழன் அன்று தாமஸ் தொலை பேசியில் அழைத்தார்.
நடேஷன் !! பாண்டிச்சேரி வந்துவிட்டேன்!!நாளை மதியம் உங்களை மீட் பண்ரேன்.29 பேர் எங்கள் குழுவில் என்றார்
.மகிழ்ச்சியாய் இருந்தாலும் கவலையாகவும் இருந்தது.ஏனெனில் 29 பேரை உபசரிக்க எங்கள் காண்டீனில் வசதி இல்லை.மேலும் நுழைவு வாயில் அருகே இருப்பது சிறிய சமையல் கூடம் மட்டுமே!!
கடலூருக்கும் எங்கள் நிறுவனத்திற்கு இடையே உள்ள் தூரம் 18 கிமீ.
வெள்ளி காலை எங்கள் பிராதான வாயிலில் உள்ள செக்யூரிட்டி அதிகாரி மற்றும் காவலர்களிடம் அவர்கள் வரப் போவதை தெரிவித்தேன்.அவர்கள் அனைவருமே அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
மிக்க மகிழ்ச்சி அடைந்து ‘’ சார் !!அவர்கள் உங்களுக்கு மட்டும் விருந்தினர்கள் அல்லர்!!எங்களுடைய விருந்தினர்களும்தான்!!”
நான் திரும்பவும் கடலூர் சென்று வருபவர்களுக்கு தேவையான தண்ணீர்,பிஸ்கெட்,ஸ்நாக்ஸ்,வாங்கும் போது ஒரு அன்பரை சந்தித்தேன்.அவர் மட்டும் என் கவனத்தை ஈர்த்த காரணம் அவர் ஒரு கம்பளியை போர்த்தியிருந்துதான்.அவர் சென்னையிலிருந்து தனியே வருபதாகவும் பாதி வழியிலேயே கடும் குளிர் காய்ச்சல் என்றும் எப்படியோ அன்னையை தரிசிக்க வேண்டும் என்ற ஆவலினால் நிற்காமல் செல்வதாகவும் கூறி வேகமாக சென்றுவிட்டார்.
மதியம் அருகே உள்ள ஊரில் அனைத்து நண்பர்களும் பகலுணவை முடித்த பின் சிறிது ஓய்வு எடுத்து 3 மணி அளவில் எங்கள் நிறுவனத்தை அடைந்தனர்!முடிந்த அளவு கிடைத்ததை வைத்து உபசரித்தோம்.கிடைத்த இடத்தில் அனைவரும் ஓய்வு எடுத்தனர்.அன்புடன் உரையாடினர்.பலரும் வெளிநாட்டில் நல்ல வேலையில் இருப்பவர்கள்.
பின் அனைவரும் ஒன்று சேர்ந்து எனக்காகவும் என் குடும்பத்தினருக்காகவும் ஒரு வழிபாடை வேளாங்கன்னி அன்னையிடம் நிக்ழ்த்தினார்கள் பாருங்கள்.என் கண்களில் ஆனந்த கண்ணீர் இப்போதும்.
அவர்கள் பயணம் அனைத்துமே நல்ல முறையில் திட்டமிடப் பட்டவை.

ஒரு நாளில் சராசரியாக 40 கிமீ நடக்கிறார்கள்.
திரும்பும்போது பஸ்,ரயில்களில் பயணிக்கின்றனர்.

இப்போது மணி மாலை 5.00. எல்லோரையும் வழி அனுப்பிவிட்டு நிற்கின்றேன்.

ஓ!காலையில் சந்தித்தேனே கம்பளி போர்த்திய மனிதர்!!அவர் இப்போது 20 கிமீ நடந்து என்னை நோக்கி புன்முறுவல் வீசிவிட்டு சென்றார்!!

ஓ !!அதில்தான் எத்தனை அர்த்தங்கள்!

அன்னையே !!ஆசிர்வதியுங்கள் எங்களை!!!!

Monday, August 07, 2006

ஸ்ரீ அன்னையின் சிலப் பொன்னான பொன்மொழிகள்

ஸ்ரீ அன்னையின் சிலப் பொன்னான பொன்மொழிகள்


அ- நம்மை நாமேத் திருத்திக் கொள்வதால் சமுதாயச் சீர்திருத்தம் தானே நிகழும்,எனவே நம்மைச் சீர்திருத்திக் கொள்வோம்.பின் சமுதாயம் தானே சீர்திருத்தம் பெற்றுவிடும்!!

ஆ-.மகிழ்ச்சி என்பது மனிதனுக்கு உள்ளேயே இருப்பதுதானே அன்றி ,வெளியேயுள்ள புறக் காரணங்களால் வருவது அன்று!!

இ.-எல்லோருடைய உள்ளங்களிலும் இருக்கிறேன் என்று விளக்கும் உணர்வே ஸ்ரீ அன்னையின் உணர்வும் உண்மையும் ஆகும்!!

ஈ-.மனிதனின் உண்மையான அனுபவங்களின் வெளிப்பாடாக மலர்வதே மகிழ்ச்சியாகும்!!

உ-.தன் கடமைகளை முறையாகவும்,ஒழுங்காக செய்வது மட்டுமே உண்மையான பக்தியும்,கடவுளை வேண்டி நிற்பது மட்டுமே ஆசனமும் ஆகும்!!

Wednesday, July 05, 2006

கால் பந்தாட்டமும் வாழ்க்கையும்


கால் பந்தாட்டமும் வாழ்க்கையும்

தற்போது உலக கால் பந்தாட்டப் போட்டி முடியும் தருவாயில் உள்ளது.எதிர்பாராத விதமாக ஜெர்மனியை வீழ்த்தி இரண்டு கோல் போட்டு இத்தாலி இறுதி சுற்றுக்கு தயராகிவருகிறது.பிரான்ஸின் கதியும் தெரிந்துவிடும்.அதுக்கு இப்போ என்ன என்கிறீர்களா!!
இல்லை அத்துடன் வாழ்க்கையும் கொஞ்சம் பொறுத்தி பார்ப்போம்.

கால் பந்தாட்டத்திற்கு எது தேவை?பந்துதான் கட்டாயம் தேவை!!ஆனால் பந்திற்கு காற்று முக்கியமாயிற்றே!எத்தனை நேரம் பந்தை உதைக்க முடியும்?
காற்றுடன் கூடிய பந்துதான் நம் வாழ்க்கையும்!!காற்று இருக்கும்வரைதான் பந்திற்கு மதிப்பு!
ஆம் பந்துதான் நம் வாழ்க்கை.!
நாம் வாழும் வாழ்க்கைதான் கால்பந்தாட்டம்..
ஒரு பக்கம் நல் இயல்புகள் ஆறு.மறு பக்கம் கெட்ட இயல்புகள் ஆறு!
காமம்,குரோதம்,லோபம்,மோகம்,மதம்,மாற்சரியம் ஒரு பக்கம்.
சத்தியம்,தர்மம்,சாந்தி,பிரேமை,அஹிம்சை,பிரகிருதி ஆகியவை மறு பக்கம்.
இரண்டிற்கும் நடுவே இருப்பதே இலக்கு அதாவது GOAL.இரண்டுக்கும் இடையே பந்தை எந்த இலக்கை நோக்கி அடிக்கப் போகிறீர்கள் என்பதுதான் வாழ்க்கை. நல்வழி நோக்கி அடிப்பதா தீய வழி நோக்கி அடிப்பதா இல்லை எங்கு வேண்டுமானாலும் போகட்டும் என்று விட்டுவிடுவீர்களா!!

சத்ய சாய்பாபாவின் பக்தை கூறிய கருத்து.

Sunday, July 02, 2006

ஒரு இலங்கை அகதி நம்பிக்கையுடன் ஜெயித்தது.

ஒரு இலங்கை அகதி நம்பிக்கையுடன் ஜெயித்தது.
ரெஜினால்ட் பாண்டிச்சேரியுலுள்ள பிம்ஸ் மருத்தவ மனையில் ஒரு டாக்டராக வலம் வருகிறார்.நுனி நாக்கு ஆங்கிலத்தில் அனைவருடனும் அன்புடன் உரையாடும் அவர் காதில் கேட்பதோ தையல் மெஷின் ஓசைதான்.
இதில் என்ன விசேடம் என நீங்கள் கேட்பது காதில் விழுகிறது.
தமிழகத்தில் இலங்கை அகதிகள் முகாமில் இருந்து உருவான முதல் டாக்டர் ஆவார்.
இலங்கை மன்னார் மாவட்டம் ,நானாட்டான் பகுதி ,யேசுராஜ் விவசாயம் செய்து வந்தவர்.2 மகன் ஒரு மகள் என்று அமைதியும்,மகிழ்ச்சியுமாய் வாழ்ந்த்க் குடும்பம்.பிரச்னை இனப் பிரச்னையுருவில் வந்தது.அகதியாக தமிழகத்தை நோக்கி வந்தது அக்குடும்பம்.இங்கு வந்ததுமே புரிந்தும் கொண்டார்கள்.அரசாங்கம் தரும் சலுகையினால் வயிற்றைக் கழுவமுடியுமேத் தவிர வேறு ஒன்றும் செய்ய இயலாது என்று!
அப்போதுதான் தாய் செபஸ்தியம்மா முடிவெடுத்தார் எப்படியாவது குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்று.
ஆனால் வருமானத்திற்கு என்ன செய்வது.ஆஹா அவர் சிறிய வயதில் கற்றுக் கொண்ட தையல் வேலை கை கொடுத்தது.ஆரம்பத்தில் யாருமே அவரிடம் துணி கொடுக்கவில்லை.பிறகு கடுமையாக போராடி அனைவரது நம்பிக்கையையும் பெற்று வாழ்வில் முதல் டாக்டரை அகதிகள் முகாமில் இருந்து உருவாக்கினார்.
எல்லாவற்றையும் விட கடலூரில்தான் தன் பள்ளிப் படிப்பை முடித்தார்!

இப்போது ரெஜினால்ட் சொல்வதைக் கேட்போமா?

‘’அம்ம மட்டும் எங்களைப் பிடிவாதமாய் படிக்கவைக்கலைன்னா நாங்களும் சும்மா சாப்பிட்டு முகாமில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்திருப்போம்.எங்களை கொஞ்சம் கூட கவலையோ வேதனையோ பட விட மாட்டங்க!அந்த அம்மவின் அக்கரைதான் எங்களை உயர்த்தியது! ‘’
இதை கடந்த இரண்டு நாட்களாக தொலைகாட்சியில் பார்த்திருப்பீர்கள்!இருப்பினும் நமது வாழ்த்துக்களை தாய் செபஸ்தியம்மாவிற்கும்,ரெஜினால்டுக்கும் தெரிவிப்போம்!!
வாழ்த்துக்கள்!! செபஸ்தியம்மா!!
வாழ்த்துக்கள் !!ரெஜினால்ட்.!!
இந்தப் பதிவை என் நண்பர் மூலமாக ரெஜினால்டுக்கு அனுப்பப் போகிறேன்!!

Monday, June 19, 2006

அன்னையின் கருத்துக்கள்

அன்னையின் கருத்துக்கள்
நோய் வருவது இயற்கை!!அதை எப்படி எதிர்கொண்டு குணமாகலாம் என்பதைக் குறித்த அன்னையின் கருத்தைத் தெரிந்துக் கொள்வோமா!!
நோயை வெல்ல வேண்டும் என்ற மன வைராக்கியத்தை நமக்குள்ளே வளர்த்துக் கொள்ளவேண்டும்! மனதளவில் மட்டுமில்லாமல் உடல் செல்கள் ஒவ்வொன்றிற்கும் அவ்வெண்ணம் வரவேண்டும்!!நூற்றுக் கணக்கான மருந்துகளை நாம் எடுத்துக்கொள்ளலாம்!!ஆனால் உடல் சம்பந்தப் பட்ட நோயை வெல்லும் மனத் திட்பம் நமக்கு இல்லை எனில் அம்மருந்துகளால் நம்மை குணப்படுத்த இயலாது!!!

நம்மைப் பிடித்திருக்கும் தீயசக்தியை நாம் அழித்துவிடலாம்!!!எத்தனை ஆயிரம் முறைகள் வேண்டுமானாலும் திரும்பச் திரும்பச் செய்யலாம்!!
நாம் தீயசக்தியை அழிக்கும் ஒவ்வொரு முறையும் ஏற்படும் வெற்றிடத்தில் வெளியில் இருந்து வேறு தீயசக்திகள் உள்ளே புகுந்து விடும்!!

நோயை வெல்வதற்குறிய தீர்மானமான மன உறுதியை நம்முள் வளர்த்துக் கொண்டே இருக்கவேண்டும்!!

இறுதியாக ,
நம் உடல் நலக்குறைவை நேசிக்காமல் இருந்தோமானால் நம் உடல் நலக் குறைவு தானே நம்மை விட்டு விலகி விடும்!!!
ஸ்ரீ அன்னை

Sunday, April 09, 2006

திருக்கடவூரும் மார்க்கண்டேயரும்!!

திருக்கடவூரும் மார்க்கண்டேயரும்!!
***************************************
திடீரென திருக்கடையூர் ஸ்தலம் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது!!பீஷ்மரத சாந்தி என்றழைக்கப்படும் எழுபதாவது பிறந்தநாள் விழா அது!!



மார்க்கண்டேயரின் வரலாறு நாம் அனைவரும் அறிந்ததே!தான் பதினெட்டு வயதில் இறக்கப் போவதை அறிந்தும் கவலையுறாமல் சிவ வழிபாடை நம்பிக்கையுடன் செய்தவர்..இந்த நம்பிக்கை ஒன்றே அவரை வாழவைத்தது!!குறிப்பிட்ட வயது அடைந்ததும் எமன் மார்க்கண்டேயன் உயிரை பறிக்க வருகிறான்!அதை அறிந்தும் சிவ வழிபாட்டையே தொடர்ந்து செய்கிறான்.வழிபாடு முடித்து வருவதாக காலனுக்கு உரைத்தும் காலன் கேட்கவில்லை!!நேரம் முடிந்ததே என்றுப் பாசக் கயிற்றை வீச அது எம்பிரான் சிவன் கழுத்திலும் விழுகிறது!!கோபம் கொண்ட சிவன் யமனை எரித்து மார்க்கண்டேயனுக்கு நீண்ட ஆயுளை வரமாகத் தருகிறான்!!மார்க்கண்டேயன் இன்றும் நம்மிடையே வாழ்ந்து சிவபூசை செய்வதாக நம்பிக்கை உண்டு!!

நாம் எடுத்துக்கொள்ளவேண்டியது என்னவெனில் முழுமனதுடன் நம்பிக்கையுடன் கடவுள் பூசை செய்வோமானால் விதியும் மாறும் என்பதாகும்!!
இனி திருக்கடவூரில் எங்கள் குழுமத்தில் இருந்த அனைத்துப் பெண்களுமே என்னை வில்லனாக்ப் பாவிக்கத் தொடங்கினர்!!ஏற்கனவே வில்லந்தான் என்கிறீர்களா!! திடிரென என்னை வில்லனாக கருதியது ஏன்!!
சுமார் இருபது வருடங்களுக்கு முன் இத்திருக்கோயில் சாதாரண அத்தனை கவனிப்பாரில்லாமல்தான் இருந்து வந்தது!!பிறகு இந்த -ஷ-ஷ்டியப்தப்பூர்த்தி அறுபதாம் பிறந்த நாள் விழாக் கொண்டாடும் வழக்கம் ஆரம்பித்து பிறகு எழுபது,என்பது ஏழை,பணக்காரர் என்ற வித்தியாசமின்றி இன்று கால் வைக்க இடம் இல்லாமல் அத்த்னைக் கூட்டம்!அத்தனை நம்பிக்கை!!
என்னை வில்லனாக பாவித்த மேட்டருக்கு வருவோம்!!எற்கனவே பஸ் ஸ்டாண்டில் என்ன வேடிக்கைப் பார்த்தேன் என்ற ராமபிரான் கேள்விக்கு இன்னும் பதிலளிக்கவில்லை!!(மறந்திருப்பார் என்று நினைக்கிறேன்,! எல்லாம் ஒரு நம்பிக்கைதான்!!)

இங்கு கோயில் உள்ளே பல ஜோடிகளின் அறுபதாம் ஆன்டு விழாவை ரசித்துக் கொண்டிருந்தேன்!!என்ன வித்தியாசம் திருமணத்தில் மணமகன் கம்பீரமாக வீற்றிருப்பான்!!மணமகள் மட்டும் சிறிது அடக்கத்துடன் வெட்கமாக( ! ) உட்க்கார்ந்திருப்பாள்!இங்கு தாத்தாமார்கள் வெட்கத்துடன் இருக்க ,பாட்டிமார்கள் பேரன், பேத்தி எடுத்த பெருமையில் கம்பீரமாக உட்க்கார்ந்திருந்தனர்!!தாத்தாக்கள் டெந்ஷனாகவும் பாட்டிக்கள் ரிலாக்ஸ்டாகவும் இருந்தனர்!!திடீரென வேடிக்கைப் பார்க்கும் வேளையில் ஒரு ஜோடியைக் கண்டுத் திகைத்தேன்!!ஜோடி என்றால் இரண்டு பேர்தானே!!
ஆனால் இது மூன்று பேர் உள்ள ஜோடி1!ஆமாம் ஒரு கணவன் இர்ண்டு புறமும் இரண்டு மனைவிகளுடன் அமர்ந்திருந்து மந்திர கோஷம் முழக்க விழாவைக் கொண்டாடிக் கொண்டு இருந்தார்!!ஆனால் உறவினர் யாருமில்லை!!
இந்த வித்தியாசமான நிகழ்வை நான் வந்திருந்த விழாவில் ஒரு சிலரிடம் கூறியதுதான் தாமதம்!!தீ பிடித்தது போல் எங்கே எங்கே என்று பார்க்க ஓடினர்!1அவர்கள் வந்து சிலரிடம் சொல்ல ஒரு பத்து நிமிடத்தில் அனைவருமே சென்று இவ்வித்தியாச ஜோடியை தரிசித்துவிட்டு வந்தனர்!!வந்த அனைவருமே தங்கள் மனைவியிரிடம் இதை பெருமையாகக் கூற அந்த பெண்மணிகள் அனைவருமே என்னை வில்லனாக பாவிக்கத் தொடங்கி என்னை முறைக்கத்தொடங்கினர்!!

ஆச்சரியம் என்னவெனில் ஒரு பெண்மணி கூட அந்த ஜோடியைப் பார்க்கபோகவில்லை!!கணவர்களை பார்த்து " போதும் !! ரொம்ப வழியாதிங்க!!"என்றுக் கண்டிப்பதிலேயே குறியாக இருந்தனர்!!சரி!!நீங்களும் என்னை வில்லனாப் பாக்காதிங்க!!திருக்கடையூர் மூன்றுப் புகைப்படத்தின் மூலம் இறைவனை தரிசியுங்கள்!!

Thursday, April 06, 2006

நம்பிக்கை வீண் போவதில்லை!





நம்பினோர் கெடுவதில்லை நம்பிக்கை வீண் போவதில்லை!
நண்பர்களே இவ்வார விழிப்பாட்டின் மூலம் நாம் செய்யும் பிரார்த்தணைக்கு பதில் கிடைத்துள்ளது!!இறைவன் கண் திறக்க ஆரம்பிக்கிறான்!! குழந்தை தெல்காவை குறித்த முக்கிய தகவல் புகைப்படம் கிடைத்துள்ளது!! கூடிய விரைவில் அவன் கிடைப்பான் என்ற நம்பிக்கையில் மீண்டும் நாம் பிரார்த்திக்கொண்டே இருப்போம்!!

Saturday, April 01, 2006

ஞானவெட்டியான் அய்யாவுடன் ஒரு சந்திப்பு!!

ஞான வெட்டியான் அய்யாவுடன் ஒரு சிறிய சந்திப்பு
சில நாட்களாக பர பரப்பாக பேசப்பட்ட ஞான வெட்டியான் அய்யா நேற்று மதியம் என்னுடன் தொலை பேசியில் உடன் சிதம்பரம் வர அழைத்தார்! அலுவல் காரணமாக இன்றுதான் செல்லமுடிந்தது!!
இன்று அதிகாலை மூன்று மணிக்கே விழிப்பு வந்துவிட்டது பயத்தில்தான்!!எங்கே மீசைக்காரரை சந்திப்பதில் தாமதம் ஆகிவிடுமோ என்று!!
பேருந்தில் ஒண்றரை மணி நேர பயணம்!!சிதம்பரம் பேருந்து நிலையத்தில் சிறிது வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்!!நான் நினைத்தது அவர் பயணக் களைப்பில் தூங்கிக் கொண்டிருப்பார் ,எனவே தொந்தரவு செய்யவேண்டாம் என்று!!மெதுவாக அவர்கள் தங்கியுள்ள ஹோட்டலை நோக்கி நடக்கத் தொடங்கினேன்!!அங்கே தெரு முணையிலேயே ஆஹா!! நமது அய்யாதான்!!காலை 6 மணியிலுருந்தே எனக்காக தெரு முணையிலேயே காத்துள்ளார்!!!
பிறகு அய்யா,அய்யாவின் துணைவியார் ஜெயலக்ஷ்மி அம்மாள் மற்றும் அவரது வளர்ப்பு மகள் சித்ரா, ஒட்டுனர் ரமேஷ் ஆகியோருடன் சிதம்பரம் அம்பலத்தரசன் நடராசனின் ஆலயத்தை சென்றடைந்தோம்.
திவ்ய தரிசனம்!!பொன்னம்பலம்,சிதம்பர ரகஸியம் ஆகியவற்றை மெய்மறந்து தரிசித்தோம்!!
சிவகாம சுந்தரி ,கைலாஸநாதரை லிங்கதரிசனத்துடன் ,கால பைரவர் சூரிய பகவான் அவர்களை வணங்கி வந்தோம்!!
ஆனால் ஒரு வருத்தம் சிதம்பரம் கோயிலில் பொதுமக்கள் சிலர் செய்யும் அசிங்கம் ,மற்றும் தீஷிதர்களின் பணம் வசூல் செய்யும் போக்கு அப்படியேத்தான் உள்ளது!!
பின்பு வெளியே கிரிஷ்ன மாமாஹோட்டலில் ஒரு பிடி பிடித்தோம்!!
நேற்று மதியம்தான் சிதம்பரத்திற்கே வந்துள்ளார்!! அதற்குள் கிரிஷ்ண மாமா, அம்பி ஆகியோர் அவரை பயங்கரமாக உபசரித்தனர்!! மதியம் சாப்பிட வந்துடுங்கோ என்ற அன்புக் கட்டளை வேறு!!
ஜெயலக்ஷ்மி அம்மா ஒரு அன்பு நிறைந்த குணவதி!! என்னை மற்றத் தலங்களுக்கும் வரும்மாறு கட்டளையிட்டார்!!
திண்டுக்கல் வர அழைப்பு விடுத்தார்!!
அவர் மகள் சித்ரா அடக்கம் ,நகைச்சுவை உணர்வு உடையவர்!!
நம்பிக்கை ராமர் காசிக்கு வழியனுப்பியதை அய்யா நினைவு கூர்ந்தார்!
மன்சூர் ராஜா,சிவசங்கர்,விஜி அம்மணி ,விழியா மற்றும் அனைவரையும் நினைவு கூர்ந்தார்!!
11 மணி அளவில் நடராஜர் ,மற்றும் ஞானம் அய்யாவின் தரிசனம் முடிந்து கடலூர்
திரும்பினேன்!

மன்னிக்க!!அவ்வளவு அவசரமா போட்டோ எல்லாம் போடமுடியுமா!!அய்யா ஊருக்குப் போய் அனுப்பறேன் என்று சொல்லியுள்ளார்!! அப்போது போடுகிறேன்!!இன்னக்கி ஏப்ரல் 1 பாருங்க!!!!!): (: ):

Thursday, March 02, 2006

வாழ்க்கை வாழ்வதற்கே!!!வெற்றி நிச்சயம் உனக்கே!!

வாழ்க்கை வாழ்வதற்கே!!!வெற்றி நிச்சயம் உனக்கே!!
வாழ்க்கை வாழ்வதற்கே!!!வெற்றி நிச்சயம் உனக்கே!!
வாழ்வது போல் நடிப்பவர் சிலர்
வாழ விரும்பாதவர்கள் சிலர்
வாழத் தெரியாதவர்கள் சிலர்
வாழக் கற்றுக் கொண்டிருக்கும் - நாம்
வாழ்க்கையில் ரகசியம் ஒன்றும் இல்லை
கஷ்ட்டப்படுவது தவிர!!!!
எனவே இளமையில் தாழ்வுணர்ச்சி வேண்டாம்
வறுமை என்று வருந்தவேண்டாம்
தன் முயற்சிக் கொள்---வாழ்க்கை புரியும்
இன்பம் வேண்டாம்-- துன்பம் வேண்டாம்
இரண்டிலும் சரிபாதி எடு---வாழ்க்கை புரியும்
ஆறும் வேண்டாம்-கிணறும் வேண்டாம் நீரை நீயே தோண்டு
வாழ்க்கை புரியும்
குயிலோசையும் வேண்டாம்குழலோசையும் வேண்டாம்
இடியோசையில் இசை கேள்
வாழ்க்கை புரியும்
குழந்தை- ஒரே நாளில் மனிதனவதில்லை
விதை- ஒரே நாளில் மரமாவதில்லை
காய் - ஒரே நாளில் கனியாவதில்லை
பூக்கள்--ஒரே நாளில் மலர்வதில்லை
அது போலத்தான்
செல்வங்களும் ஒரே நாளில் சேர்வதில்லை
அது போலத்தான்
வெற்றியாளர் --ஒரே நாளில் உருவாவதில்லை
வாழ்க்கை வாழ்வதற்கே!!!வெற்றி நிச்சயம் உனக்கே!!

Saturday, January 21, 2006

real to accept

கற்றோரைக் கற்றோரேக் கற்றோரேக் காமுறுவர்

நல்லோரைக் காண்பதும் நன்றே நல்லோர் சொல் கேட்பதும் நன்றே

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லாருக்கும் பெய்யும் மழை!

முனிவிலும் நல்குவர் மூதறிஞர் உள்ளக்கனவிலும் நல்கார் கயவர்,நனிவிளைவில் காயினும் ஆகும் காதலிதான் எட்டிப்பழுத்தாயினும் ஆமோ அறை!
பந்தலின் முகப்பில் வாழையினைக் கட்டுகிறோம் வாழையடி வாழையாக வாழவேண்டுமென்று!இவ்வாழையைக் குறித்து சிறிது சிந்திப்போமா!

வாழைத் தன்னை வெட்டுபவருக்கும் காயாக இருந்தாலும் பலன் தருகிறது!

பழுத்தால்தான் பயன் தரும் என்றில்லை!பூ,பிஞ்சு,காய்,கனி ,இலை,தண்டு,மட்டை என்று பயன்கள் ஏராளம்.இப்போது எட்டி மரத்தை பார்ப்போமா!எட்டி மரம் காய் என்றில்லை ,பழமாக இருந்தாலும் மக்களுக்கு பயன்படுவதில்லை.!

நல்லோர்கள் எத்துனை துன்பம் ஏற்படினும் அறநெறியிலிருந்து வழுவார்.செய்யத்தகாதவற்றை செய்யார்.சொல்லத் தகாதன சொல்லார்.நினைக்க ஒண்ணாதவற்றை நினையார்.

நல்லாற்றொழுக்கின் தலை நின்றார் நல்கூர்ந்தும் அல்லன்செய்தற் கொருப்பார் பற்பொழிய

செங்கட் புவியேற்றப் பசித்தும் தின்னாவாம்

பைங்கட் புனத்த பைங்கூழ்.

சந்தனம் அரைத்தாலும் மணம் கமிழும்,அகில் புகைத்தாலும் கமழும்,சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.எத்துனைத் துன்பம் நேரினும் நல்லோர் தங்கள் தகுதியினின்றும் குறைவு படார்!கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே!

இன்னாசெய்தாருக்கும் இனியவையே செய்யும் சார்பு படைத்தவர் நல்லோர்.

தம்மை அவமதிக்க வந்த மிகக் கொடியவர்களாகிய துரியோதனன் முதலியோரை த் தருமர் வனத்தின் இடையில் வரவேற்று இன்னுரைப் பகர்ந்தார்!அறிவுரை கூறினார்.!குபேரன் தனக்கு அளித்த ஆடை,அணிகலன்களை அளித்து இன்முகத்துடன் உபசரித்து ஊருக்கு அனுப்பி வைத்தார்.

தீர்வரும் இன்னல் தம்மைச் செய்யினும்

சிந்தை பேரருளாள்ற்தத்ஞ் செய்கையில் பிழைப்ப்

துண்டோகார்வரை நிறுவித் தன்னைக் கணலெழக் கலக்கக் கண்டும்

ஆர்கலி அமருய்ய அமுது பண்டளித்தே தன்றே.

தேவர்கள் இனிய பாற்கடலில் மந்திர மலையை விடுத்து கடலை கலக்கி துன்புற்த்தினர்.பாற்கடலோ அவர்களுக்கு அமுதத்தை அல்லவா அள்ளித் தந்தது.

நல்லோர் என்போர் அகிலாண்டக் கோடி பிரமாண்ட நாயகன் உள்ளத்தில் எழுந்தருளினால் எத்தகையப் பேறுக்கிடைத்திடுமோ அதைப் போலத் தன்மை உடையவர். நல்லோர் ,பொன், பொருள் ,நிலம் ,ஆடை யாவும் விண்மீனுக்கு ஒப்பகும்.சூரியனானது வானத்தில் ஒளிர்ந்து உலகை ஒளிமயமாக்குவதுப் போல் நல்லோர் உலகை வழி நடத்திச் செல்லும் உத்தமர்கள்.நல்லோர்களின் பாதச்சுவடைப் பின் பற்றி நாமும் நல்லோராக அவர்களின் வழி நின்று மிளிர்வோம்.!

"நல்லோரின் சேர்க்கை புத்தியில் மந்தத்தைப் போக்குகிறது.பேச்சில் உண்மையை வரவழைக்கிறது.மேலான கௌரவத்தைக் கொடுக்கின்றது.பாபத்தை போக்கும்.குறிப்பாக மனதைத் தெளிவாக்கும்.பல திக்குகளில் புகழைப் பரப்பும்.நல்லோர்களின் சேர்க்கை எதைதான் கொடுக்கவில்லை!என்பது பெரியோரின் வாக்கு!"

Saturday, January 07, 2006

hayagreaver

" ஞானானந்தமயம் தேவம்
நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யானம்
ஹயக்ரீவம் உபாஸ்மஹே"

ஒரு சிறிய ப்ரச்னை!

புள்ளைங்கப் படிக்கமாட்டேங்குது!கவலை படாதீர்கள்!கடலூர் அருகே இருக்கும் திருவஹீந்திபுரத்தில் ஹயக்ரீவரைத் தரிசியுங்கள்!கூடவே கண்டிப்பா படிக்கவும் சொல்லுங்க!
ஒருப் பையனைக் காலைலே அப்பா எழுப்பிவிட்டாராம்.பையன் சொன்னானாம் ! அப்பா நம்பதான் ஹயக்ரீவர் ஐ கும்பிடறமே, இன்னும்மா படிக்கனும் என்றானாம்,!!!

Friday, December 30, 2005

ஹனுமத் ஜெயந்தி


இன்று ஹனுமத் ஜெயந்தி ஒரு சிறப்பு மிக்க பண்டிகை.அவதாரப் புருஷன் அனுமார் வாயுவிற்கு மகனாகப் பிறந்தார்.இளம் வயதிலேயே திருமாலுக்கு சேவை செய்வதற்காக பிறந்தவன் நீ என்று கூறி வளக்கப்பட்டவர்.அவர் எப்படி நான் திருமாலை அடையாளம் கொள்வது என்றுக் கேட்டபோது யாரைப் பார்த்தால் உனக்கு அன்பும் பாசமும் பெருகிறதோ அவரே திருமால் என்று கூறப்பட்டது.அவர் ராமனை க் காட்டில்தான் முதல் முதலில் பார்த்தார்.மிகுந்த பரவசம் அடைந்தார்.பிறகுராமனுடைய தூதுவனாக மாறினார் என்பது நாம் அறிந்ததே.

நாம் அறியாதது ராமன் தனது அவதாரம் முடிந்து வைகுண்டம் செல்லப் போகிறார். அவர் அனுமனையும் தன்னுடன் அழைக்கிறார்.அதற்கு அனுமன் அங்கு ராம் நாமம் உண்டா என்றுக் கேட்டபோது ராமர்இல்லை எனச் சொல்ல "ராம நாமம் இல்லாத இடத்திற்கு தான் வரவில்லை என்று கூறி பூமியிலேயே தங்கிவிடுவதாக " கூறி இன்றும் ந ம்மிடையே வாழ்ந்து வருவதாக நம்பிக்கை.. இந்த நல்ல தினத்தில் பயத்தை ஒழித்து வாழ்வாங்கு வாழ்வோம்!

இவ்வேளையில் சுமார் இரு நூறு ஆண்டுகளாக அருள் புரியும் கடலூர் ஆஞ்சநேய பகவானை தரிசியுங்கள்!

Friday, December 23, 2005

christmas


A PRAYER TO BLESSED VIRGIN (never found to fail)

O MOST BEAUTIFUL !.FLOWER OF MOUNT OF CARMEL!
FRUITFUL VINE ,SPLENDOUR OF HEAVEN
BLESSED MOTHER SON OF GOD,!
IMMACULATE VIRGIN ASSIST ME IN THIS MY NECESSASITY,
O STAR OF THE SEA!HELP ME AND SHOW ME HEREIN
YOU ARE MY MOTHER!

O , HOLY MARY,MOTHER OF GOD, QUEEN OF HEAVEN
AND EARTH, I HUMBLY BESEECH YOU
FROM THE BOTTOMOF MY HEART
TO HELP ME IN THIS NECESSASITY;
THERE ARE NONE THAT CAN WITHSTAND YOUR POWER,
O SHOW ME HERE IN YOU ARE MY MOTHER!

O MANY CONCEIVED WITHOUT SIN
PRAY FOR US WHO HAVE RECAUSE TO YOU.
O SWEET MOTHER I PLACE THIS CAUSE IN YOUR HANDS!

A PRAYER TO BLESSED VIRGIN (never found to fail)
O MOST BEAUTIFUL FLOWER OF MOUNT OF CARMEL
FRUITFUL VINE ,SPLENDOUR OF HEAVEN
BLESSED MOTHER SON OF GOD,
IMMACULATE VIRGIN ASSIST ME IN THIS MY NECESSASITY,
O STAR OF THE SEA,HELP ME AND SHOW ME HEREIN
YOU ARE MY MOTHER!

O , HOLY MARY,MOTHER OF GOD, QUEEN OF HEAVEN
AND EARTH, I HUMBLY BESEECH YOU
FROM THE BOTTOMOF MY HEART
TO HELP ME IN THIS NECESSASITY;
THERE ARE NONE THAT CAN WITHSTAND YOUR POWER,
O SHOW ME HERE IN YOU ARE MY MOTHER!

O MARY CONCEIVED WITHOUT SIN
PRAY FOR US WHO HAVE RECAUSE TO YOU. O SWEET MOTHER I PLACE THIS CAUSE IN YOUR HANDS

Wednesday, December 21, 2005

அன்னையின் சின்னம்.

 

                         

                    நமது அன்னையின் சின்னம்.

நடுவில் உள்ள வட்டம் இறைவனின் மெய்ய்ணர்வைக் குறிக்கிறது.நான்கு இதழ்கள் அன்னையின் நான்கு சக்திகளாகிய  மகேஸ்வரி,மகாகாளி,மகாலட்சுமி,மகா ஸரஸ்வதி ஆகியோரைக் குறிக்கின்றன.சுற்றிலுமுள்ள பன்னிரண்டு இதழ்கள் அன்னையின் செயல்பாட்டிற்காக வெளிப்படும் பன்னிரன்டு சக்திகளைகுறிக்கின்றன.அவை உண்மை,பணிவு,நன்றி,விடாமுயற்சி,ஆர்வம்,ஏற்புதிறன்,முன்னேற்றம்,தைரியம்,  நற்பண்பு,பெருந்தன்மை,சமத்துவம்,அமைதி ஆகியனவாகும்.



--
முன்னேற்றம் என்னும் நம்பிக்கைத் "தீ" நம் உள்ளத்தில் கொழுந்து விட்டு எரியட்டும்!! - அன்னை

Monday, December 19, 2005

கசாப்பு கடையில்

கசாப்பு கடையில் தனது முறை வர காத்திருக்கும் வெள்ளை ஆடுதான் நான். இந்நிலையில் நான் எதை புரிந்துக் கொள்ள போகிறேன்.கோழிக்குஞ்சு ஒன்றினை அதனது தாய் கேட்டதாம் நீ என்னவாகப் போகிறாய் என்று.அப்போது அது கூறியதாம் ,சிக்கன் 65 ஆகவோ அல்லது பிரியாணியாகவோ ஆகப் போகிறேன் என்றுப் பெருமையுடன் கூறியதாம்.!என்னை யாரும் கேட்கவில்லை.கேட்டிருந்தால் குழப்பம் அடைந்த்ருப்பேன்.என்னவாகப் போகிறேன் என்பது ஒரு புதிராகத்தானே இருந்தது.!
ஆமாம்!மனிதன் கடவுளுக்கு பயந்தவனா?புனித யாத்திரை,விரதம்,மலைக்குச் செல்லுதல் மூலமாக புனிதம் அடைந்து விடுகிறானா?அப்படியென்றால் அனைவரையும் பிடித்துக் கொண்டுப் போய் புனிதம் அடையச் செய்யலாமே!
கடவுளை ஏமாற்றிய கதை ஒன்று தெரியுமா!
இனிய கடல் பயணம்.சொகுசுக் கப்பலில் ஆடல்,பாடல்,ஆட்டம்,பாட்டம்தான்.!
திடீரென பலத்த காற்று,பேய் மழை கப்பலே ஆட்டம் கண்டது.என்ன செய்தாலும் கப்ப்லை காப்பற்ற
முடியுமா என்பதே சந்தேகம் ஆயிற்று!எல்லோரும் கதற உயிர்த் தப்பிக்குமா என்பதுக் கேள்விக் குறி ஆயிற்று!
அப்போது ஒரு இறை நம்பிக்கையுடையவர் கூருகிறார்."நாம் பிரார்த்தனை மூலமாகத்தான் தப்பிக்க இயலும்.இறைவனை நம்புவது ஒன்றே வழி.தப்பித்துப் பிழைத்தோமனால் இக்கப்பலை இறைவனுக்கு காணிக்கை
ஆக்குவோம்!"உயிர் பயத்தில் ஏகமனதாக அணைவரும் ஒத்துக்கொள்கின்றனர்.என்ன ஆச்சரியம்!மழை,காற்று எல்லாம் மாயமாக மறைந்து விட்டதே!பத்திரமாக கரை திரும்பியாகிவிட்டது..கரை திரும்பியவர்களுக்கோ மனம் மாறிவிட்டது.கப்பலைக் காணிக்கையாகக் கொடுப்பதாகப் பிரார்த்தனை செய்தவரைத் திட்டித் தீர்த்தனர்.அப்போது ஒரு நயவஞ்சகன் கூறுகிறான்.இப்பிரச்னையை தானேத் தீர்ப்பதாக!
பின்விளம்பரம் ஒன்று!" அனைத்து வசதிகளுடன் கப்பல் ஒன்று விற்பனைக்கு!பூனையுடன்!!கண்டிப்பாக
இரண்டையும் சேர்த்துத்தான் விற்கப்படும்" என்று.விந்தையிலும் விந்தை!பூனைக்கும் கப்பலுக்கும் என்ன சம்பந்தம் இருக்கமுடியும் என்று மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.இருப்பினும் சிலர் கப்பலை வாங்க வந்தனர்.உள்ளே நுழையும் போதே பூனையையும் சேர்த்துதான் வாங்கவேண்டுமென்று கட்டளையிடப்பட்டனர்.மர்மம் என்னவென்று புரிகிறதா?
விலை பேசும் படலம் தொடங்குகிறது.
இதோ இந்த சொகுசானக் கப்ப்லை ஒரு அருமையான பூனையுடன் விற்கின்றோம்.கப்பலின் விலைப்
வெறும் இருபதே ரூபாய்தான் ,பூனையின் விலை இரண்டு கோடி ரூபாய்.வாங்குபவர்களுக்கோ குழப்பமோ குழ்ப்பம் ஏதாகிலும் கப்பலின் விலை இரண்டு கோடிக்கு மேல் தாண்டும்.பூனையைக் கொடுத்தால் என்ன,யானையைக் கொடுத்தால் என்ன!என்று இரண்டு கோடி இருபது ரூபாய்க்கு கப்பலையும்,பூனையையும் சேர்த்து வாங்கிச் சென்றனர்.!
இதோ பிரார்த்தனை நேரம்.காணிக்கைச் செலுத்தும் நேரம்.கப்பல் விற்ற பணம் இருபது ரூபாயை பயபக்தியுடன்
உண்டியலில் செலுத்துகின்றனர்.பூனை விற்ற பணத்தை நேர்மையாகப் பங்கிட்டுகொள்கின்றனர்.என்ன நேர்மை பாருங்கள்!


கடவுளையே ஏமாற்ற நினைக்கும் மனிதன் மனிதனை ஏமாற்றுவது என்ன கஷ்டமான செயலா!ஜாதியையும் ,ஏழ்மையையும்,சுனாமியையும் வைத்து இங்கு சம்பாதிப்பர்கள் எத்தனை பேர்
விரதமிருந்து கோவில் சென்று திரும்பியவர்கள் எப்படியிருக்கவேண்டும்?ஒரு முறை சென்று வந்தாலே தங்கள்
தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும்.ஆனால் விரதம் முடிந்த உடனேயேதான் எல்லாவற்றையும் ஆரம்பித்து விடுகிறார்களே.
வாழ்க்கை எப்போது அர்த்தமுள்ளதாக ஆகிறது?அணைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும்போது!அன்பு
என்றால்?தனக்காக மட்டும் வாழாமல் பிறருக்காகவும் சிறிது வாழ முயற்சிப்பவரே அன்பானவர
பிறருக்காகவும் வழ்வதுதான் அன்பு என்றாள்,பிறருக்காக சாவதும் அன்புதானா?இல்லை,பிறருக்காக சாக
நேர்ந்தால் அது சாவல்ல!நீடித்த வாழ்வே!தர்மம் அவர்களை சாகவிடாது!மரணத்தை நிறுத்திவிடும்.?
எத்தனையோ பேர் இறந்திருக்கிறார்களே அதெல்லாம் சாவில்லையா?உயிர் பிரிதல் வேறு!சாவு வேறு!பிறருக்காக சாக நேர்ந்தால் உயிர் பிரியலாம்!அது சாவல்ல!தியாகம்.ஏசுவின்,காந்திஜியின்
உயிர் பிரிந்தது, அது சாவல்ல!என்றும் அழியாத ஜீவிதம்!அழிவற்ற அமரத்தன்மை!்.ஒரு புறம் இயற்கையின் சீற்றம்,மறுபுறம் மனிதனின் கோரத்தாண்டவம்!விடிவுதான் எப்போது?
ஏதோ சோகக்கதையைச் சொல்லி உங்களின் அணுதாபத்தை பெற நான் விரும்பவில்லை.வாழ்வில் வாழ்வதின்
அர்த்தம் ஒன்று வேண்டும்.?
கசாப்பு கடையில் இன்று வியாபாரம் இல்லை.எனது முறையும் வரவில்லை.அது வரை தொடரும்!

Thursday, December 08, 2005

அவரவர்க்கு அவரது துயரம்.

இதோ நமது முந்திரி மரம் தனது துயரத்தை கூறாது கூறுகிறதே!அன்புடையீர்,கடும் மழை ,வெள்ளத்தில் தப்பித்து பிழைத்து மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்றோம்.திரும்பித்தான் ஆக வேண்டும்.வீடுகளில் சேதம்,நிலங்களில் பயிர்கள் அழுகியதைக் கண்டு மனம் வேதனை கொள்கிறது.கடும் மழை ,வெள்ளத்தில் தப்பித்து பிழைத்து மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்றோம்.திரும்பித்தான் ஆக வேண்டும்.வீடுகளில் சேதம்,நிலங்களில் பயிர்கள் அழுகியதைக் கண்டு மனம் வேதனை கொள்கிறது.தொழிற்சாலைகள் அடைந்த சேத்ங்கள் அதிகம் எனினும் தினசரி தொழிளர்கள் ஊதியமின்றி பட்டவேதனைகளை வார்ததையில் வர்ணிக்க இயலாது.இத்துயர நேரத்தில் இரவு பணியிலிருந்து லேட்டாக வந்து எப்படியும் வீட்டை அடைந்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் ஆபத்தை அறியாது புதிதாக கட்டப்பட்டுகொன்டிருக்கும் பாலத்தில் ஆழம் அறியாது உயிரை விட்ட நண்பரின் குடூம்பத்தினர்க்கு ஆறுதல் தருபவர் யார்?
திக்கற்றோர்க்கு தெய்வமே துணை என்பது சான்றோர் வாக்கு.இறைவா எங்களுக்கு பொன்னும் பொருளும் வேண்டாம்.உழைப்பதற்கு ஆரோக்கியத்தை தா,போதும் என்ற மனதினை தா,உன் மீது நாங்கள் வைத்திருக்கும் ந்ம்பிக்கைய என்றென்றும் குலைத்து விடாதே!

Saturday, November 26, 2005

annaiyin arul.


அன்னையின் அருள் :
உனது நேர்மையும்,சரணமும் உண்மையாகவும் முழுமைப் பெற்றதாகவும் இருக்கட்டும்.

*எவ்வித அச்சமோ,ஆபத்தோ அழிவோ இன்றி வாழ்க்கையில் செல்ல தேவையானவை இரண்டு மட்டுமே.ஒன்று அன்னையை நம்புவது, மற்றது நம்பிக்கை நீ உன் வாழ்வில் வைப்பது மட்டுமே.


*அன்னை பிறந்த நாள் : 1878 ,21,பிப்ரவரி.
*இயற்பெயர் ; மிர்ரா
* இந்தியா வந்தது ;1914 மார்ச் 29.

"mother' grace"
"let us keep flaming in our heart the fire of PROGRESS".
- THE MOTHER.

Friday, November 25, 2005

the effort &mother's blessing.

முன்னேற்றம் என்னும் நம்பிக்கை தீ நம் இதயத்தில் கொழுந்து விட்டு எரியட்டும்.

அன்னை.
நடேசன்.ரா.
நண்பர்
பரன்சோதி
மூலம்
ஒரு
சிறிய
முயற்ச்சி
செய்கின்றேன்.அனுபவின்மை
காரணாமாக
வேகமாக
செய்ய
இயலவில்லை.எனது
அன்னையின்
கருணையினால்
அணைவரும்
நீடுழி
வாழ
வாழ்த்துகிறேன்.

"you can chant Mruthyumjaya manthra 11 times minimum
or more if your time permits.This manthra is
beneficial for health; Om thrayambakam yajaamahe
sugandhim pushti vardhanam uurvaaru kamiva bandhanaath
mruthyor mukshiiya maamruthaath"


__________________________________
Start your day with Yahoo! - Make it your home page!
http://www.yahoo.com/r/hs

Wednesday, November 23, 2005